Translate

Friday 18 May 2012

கருணாநிதிக்கு சொந்த சரக்கு கிடையாது!: தமிழருவி மணியன்


அடுத்தவர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய கருத்தாக கூறி ஊடகத்தில் பரப்பிவிடுபவர் கருணாநிதி என்று காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார்.

சத்யம் தொலைக்காட்சியில் இன்று காலையில் 11.30 மணிக்கு ஒளிபரப்பான ‘சூடா ஒரு டாக்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழருவி மணியனிடம் ஈழம் குறித்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. தனி ஈழம் சாத்தியமா? உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலமே தனி ஈழம் குறித்து முடிவு செய்யவேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார் பேட்டி கண்டவர்.
அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், எம் இன மக்களை காங்கிரசின் உதவியோடு ராஜபக்ஷே அழித்தெடுத்தான் என்று சூடானார். பின்னர் தொடர்ந்த அவர், அடுத்தவன் கடை சரக்கை எடுத்து தன்னுடைய கடை சரக்காக விற்பவர் கருணாநிதி என்றார். முதன் முதலாக வைகோதான் தமிழ் ஈழம் தேவையா என்பதை ஈழத் தமிழர்கள்தான் நிர்ணயம் செய்யவேண்டும். வாக்கெடுப்பு நடத்தி அவர்களிடம் கருத்துக்களை கேட்டுப் பெறவேண்டும் என்று கூறியவர். அதை இப்போது கூறும் கருணாநிதி தன்னுடைய கருத்தைப்போல பதிவு செய்யப் பார்க்கிறார் என்றார்.
பேட்டியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் அவர் முன் வைத்த கருத்துக்கள் உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களை கவர்ந்திருக்கும் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment