வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் பயன்பாட்டில் நின்ற வாகனம் ஒன்று அவரது அலுவலகத்தில் பின்பக்கமாக செலுத்திய போது முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை வேட்பாளருமான உதயன் என அழைக்கப்படும் பி.பரஞ்சோதி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இன்று காலை (17/5) வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பி.பரஞ்சோதி அங்குள்ளவர்களுடன் கதைத்துவிட்டு நின்றவேளை பாராளுமன்ற உறுப்பினரின் பாவனையில் உள்ள வாகனம் பின் பக்கமாக சாரதியொருவரால் செலுத்தப்பட்ட போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாகவும் ஏற்கனவே சிறுநீரக கோளாறால் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் விபத்தின் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment