Translate

Sunday, 3 June 2012

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தடை செய்ய முயற்சி


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தடை செய்ய முயற்சி
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தடை செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாணவர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதாக உயர்கல்வி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
 
பகிடிவதை, ஜனநாயக விரோத செயல்கள் உள்ளிட்ட குழப்பங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டொக்டர். சுனில் ஜயந்த நவரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பல்கலைக்கழக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பகிடி வதையில் ஈடுபடும் மற்றும் ஆதரவளிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் எவ்வித தடையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஜனநாயக விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
குறித்த மாணவர் ஒன்றியம் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், மனித உரிமை மீறல், கலகங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தடை செய்ய நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment