Translate

Sunday, 3 June 2012

தமிழ் மொழி உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்த முடியாது


தமிழ் மொழி உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்த முடியாது
 தமிழ் மொழி உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களின் முக்கிய அங்கமாக மொழி உரிமைகயை உறுதிப்படுத்தல் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதியளவு வளங்கள் இல்லமையே பிரதான சவாலாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அர்ப்பணிப்பு உள்ளிட்ட ஏனைய காரணிகள் குறித்தும் கவனம் செலுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மொழி உரிமைகள் என்ற தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் பிரசூரம் ஒன்றை மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது பாக்கியசோதி சரவணமுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1998ம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய மொழி ஆணைக்குழுவில் தலைமை தாங்கிய டொக்டர் தேவநேசன் நேசய்யாவினால் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment