இம் மாத இறுதியில் அமைதிப் போராட்டம் ஆரம்பம்; சிறிதரன் எம்.பி
வடக்கு கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அவர்களது நிலங்களையும், வீடுகளையும் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர் இதனைக் கண்டித்து இம்மாத இறுதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சாத்வீகப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஒன்லைன்உதயன் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி யுத்தத்தை ஏற்படுத்தி வந்த அரசாங்கம் தற்போது யுத்த முடிவின் பின்னர் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது. அதனடிப்படையில் முறிகண்டியில் மக்களுக்குச் சொந்தமான நாலாயிரம் ஏக்கர் காணியில் சிங்களக் குடியேற்றத்தினை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளையில் எமது மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் அகதி முகாம்களின் வாழ்ந்து வருகின்றனர்.
இவற்றுடன் மேலும் பல சிறிலங்கா அரசின் அடாவடியான செயற்பாடுகளைக் கண்டித்தே எமது போராட்டம் ஆரம்பமாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment