Translate

Sunday, 10 June 2012

சிங்களவர் சொன்னாலும் இக்கருத்து சிந்திக்கப்பட வேண்டியதே..


இந்நாட்டு தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதுவும் கிடைக்குமானால் ஜே.வி.பி. இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித போராட்டங்களையும் நடத்தவில்லை என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் மக்கள் மீது குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு எதுவித கரிசனையும் இல்லை. சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கவென இந்தியா பொறுப்பேற்ற காணிகளில் வசித்த தமிழ் மக்கள் இன்றும் அகதி முகாம்களில் அவல வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த மக்கள் குறித்து இந்திய அரசு எதுவும் செய்யவில்லை.
வடக்கு ரயில் பாதை அமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ரயில் பாதை அமைப்பதற்கு தேவைப்படும் தொழிலாளர்களையும் இந்தியாவிலிருந்து வரவழைத்துள்ளது. இதனால் வடக்கில் வாழும் தமிழர்களின் தொழில் வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறிப் பிரவேசித்து கடல் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். இதனால் வடக்கு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்படுகின்றனர் இவற்றையெல்லாம் பார்க்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீது இந்தியாவுக்கு எதுவித அக்கறையும் இல்லையென்பது தெளிவாகின்றது.
தமிழ் மக்களுக்கு உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்க குழு அமைக்கவும் தேவையில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் தேவையில்லை. உடனடியாக இவற்றைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment