அமெரிக்க அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பற்றிய தகவல் அம்பலமாகியுள்ளன.
அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர், அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரிகிளின்ரனிடம் இந்த ஆவணத்தை சமர்ப்பித்துள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுது;துவது என்பதனைஅடிப்படையாகக் கொண்ட இரண்டு பக்க அறிக்கை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலாளா லலித் வீரதுங்க தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பரிந்துரைகள ;அமுல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த அமைச்சுக்களின் ஊடாக திட்டங்கள் அமுல்படுத்தப்படும் போன்ற விபரங்கள் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆவணம் மிகவும் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கிளின்ரன் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவிடம் எந்தவொரு ஆவணமும் கையளிக்கப்படவில்லை என வெளிவிவகாரஅமைச்சரும் ஆளும் கட்சியினரும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்துமாறு கிளின்ரனிடம், அமைச்சர்பீரிஸ் கோரியதாக கடந்த மே மாதம் 19ம் திகதி ஏ.எப்.பீ என்னும் சர்வதேச ஊடகம்வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment