உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்தவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுது;த அரசாங்கம்ஆர்வம் காட்டிய போதிலும், அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித காத்திரமான முனைப்புக்களும்எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குழுவினர் இதுவரையில் முக்கியமான தீர்மானங்கள் எதனையும் எடுக்கத் தவறியுள்ளதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சர்களின் பங்களிப்பு குறித்து இதுவரையில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப்பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கருத்து கோரப்பட்டதாகவும், அதற்கும் உரிய பதில்கள் இதுவரையில் கிடைக்கப ;பெறவில்லைஎனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையைஅமுல்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment