Translate

Sunday, 10 June 2012

ஆத்தா இது கோத்தாவின் கோமாளிக் கூத்து


இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளைக் கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்தச் செயற்பாடுகள் எந்தவித தடைகளுமின்றி மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். தடைகளைச் சவாலாக ஏற்று விகாரைகளைக் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் அதிக அளவிலான பௌத்த விகாரைகளைத் தரிசிக்க முடியாத நிலைமை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தன.
இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இப்போது அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது.தற்போது அவை புனரமைக்கப்பட்டுவருகின்றன.
அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் நாம் எதிர்கொள்வோம். குறிப்பாகப் பௌத்தன் என்ற முறையில் விகாரைகளைக் கட்டியெழுப்புவதற்கான் சகல நடவடிக்கைகளையும் என்னால் மேற்கொள்ள முடியும். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதன் மூலம் எமது மரபுரிமைகளை நாங்கள் பாதுகாக்க முடியும்என்றார் அவர்.

No comments:

Post a Comment