Translate

Saturday, 7 July 2012

சிறப்பு முகாம்களை மூடக்கோரி 10 ஆம் திகதி முற்றுகைப் போராட்டம்: சீமான் _


  சிறப்பு முகாம்களை மூடக்கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 



இலங்கையில் வன்னி முள்வேலி முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிங்கள இராணுவம் கொடுமையான தாக்குதல் நடத்தியதில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இங்கேயும் கிட்டத்தட்ட அதே கொடுமையை க்யூ பிரிவு காவலர்களும் அதிகாரிகளும் இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழத்து விடுகின்றனர்.

எனவே சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட வன்னி முகாம்களுக்கு இணையான இந்த சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடிட வேண்டும். அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்று நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது. இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் தமிழின் உணர்வாளர்களும் பெருமளவிற்கு கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

No comments:

Post a Comment