Translate

Thursday, 12 July 2012

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:-


வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:-
 வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போருக்கு பின்னர், வடபகுதியில் உள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களுமே உதவி செய்தனர் எனவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அடிக்கடி வந்து வாக்குறுதிகளை மாத்திரம் அள்ளி வழங்கி விட்டு சென்றதாகவும் வடமாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற தந்த ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ஷ, வன்னியில் உள்ள பாடசாலைகளின் அபிவிருதிக்காக 5 மில்லியன் ரூபாவும்  நீச்சல் தடாகமும் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதுவும் மகிந்த சிந்தனைக்கு ஈடான வாக்குறுதியாக மாறியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 491 பாடசாலைகளில் 67 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 107 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 112 பாடசாலைகளில் 18 பாடசாலைகளும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 126 பாடசாலைகளில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 197 பாடசாலைகளில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த மாவட்டத்தல் 109 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் பல பாடசாலைகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ளன.
வடக்கில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யாது, பாடசாலைகளை சுற்றி தவறணைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படடு வருவதாகவும் இது வட பகுதியை சேர்ந்த இளைஞர்களை அழிக்கும் மறைமுக வேலைத்திட்டம் எனவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment