Translate

Thursday 12 July 2012

யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்

யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்
கோத்தாபய ராஜபக்ஷ - இணைப்பு 3
யுத்த காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும்
படைவீரர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் படையினருக்கு தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவ சட்டங்களுக்கு அமைய கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தப்பிக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட பொறிமுறைமையொன்று காணப்படுவதாகவும், அந்தப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது பற்றி விசாரணை செய்ய இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நபர்கள் அல்லது குழு தொடர்பில் உரிய ஆதாரங்கள் இருந்தால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களை பாதுகாப்பத்தில் கூடுதல் சிரத்தை காட்டிய போதிலும், யுத்தத்தின் போது ஓரளவு பொதுக்கள் இழப்புக்களை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமான முறையில் படையினரை இணைத்துக் கொண்டதுடன், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2ஆம் இணைப்பு குற்றச் செயல்களை தடுக்க காவல்துறையினருக்கு பூரணஅதிகாரம் வழங்கப்பட்டுள்ளது –
04.40Am
குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தகாவல்துறையினருக்கு பூரணமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களைகட்டுப்படுத்த காவல்துறை மா அதிபருக்கு பூரண அதிகாரம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவராலும் காவல்துறை விவகாரங்களில் தலையீடுசெய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் கட்டகளைகளுக்கு காவல்துறைஉத்தியோகத்தர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்ககாவல் துறையினருக்கு எவ்வித தடைகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள்இடம்பெற்று வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுக்குஅரசாங்கமோ அல்லது காவல்துறையோ பொறுப்பு ஏற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தந்தை மகளையும், சிறிய தந்தை மகளையும்பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு காவல்துறையினர் மீது குற்றம் சுமத்த முடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரால் மட்டும் இந்தக் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதத் தலைவர்கள், ஊடகங்கள், சிவில்சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அவசியம் அஎன பாதுகாப்புச் செயலாளர்குறிப்பிட்டுள்ளார்.
தகுதி தராதரத்தை கவனத்திற் கொள்ளாதுகுற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்குமாறு காவல்துறையினருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை:- )
1ஆம் இணைப்பு - 1: 46Am
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த குற்றச் செயல்களுடன சம்பந்தப்பட்டவர்களை எந்த அழுத்தங்களுக்கும் அஞ்சாமல் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்த அழுத்தங்களுக்கும் அடிப்பணிய வேண்டாம் எனவும் குற்றங்களை ஒழிக்கும்  நடவடிக்கையின் போது, அரசியல்வாதிகள் எவருக்கும் அதில் தலையிட அனுமதிக்க வேண்டாம் எனவும் காவற்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் அப்படியான அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து, குற்றவாளிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வராத அதிகாரிகளுக்கு மன்னிப்பு வழங்க போவதில்லை. இவர்களையே முதலில் கைதுசெய்ய போவதாகவும் கோத்;தபாய தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment