ரொஷான் நாகலிங்கம்
கிழக்கு மாகாண சபைக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்பே தாக்கல் செய்யவுள்ளதாகக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி வேட்பாளர்களை இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி வேட்பாளர்களை இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில் தற்போது வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அக்கட்சிதனது தீர்மானத்தை வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி மாகாணத்தில் 35 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 10,33,749 பேர் வாக்களிக்கவுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி மாகாண சபைத் தேர்தலில் 35 கட்சிகளும் 46 சுயேச்சை குழுக்களும் போட்டியிட்ட நிலையில் 6,46,456 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment