Translate

Thursday, 12 July 2012

முக்கால்வாசித் தமிழர்களை கொன்று விட்ட வடக்கில் தேர்தல் நடத்தப் போகிறாராம் ராஜபக்சே!


கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு கவுன்சில் தேர்தலை நடத்தப் போவதாக ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை இலங்கைப் படையினர் சுடுகாடாக மாற்றி விட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து விட்டனர். பல பகுதிகளில் இன்னும் மக்கள் குடியேறாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கவுன்சில் தேர்தலை நடத்ததப் போகிறாராம் ராஜபக்சே.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் கவுன்சில் தேர்தலை அடுத்த ஆண்டு (2013) செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பு இங்கு பல பணிகள் செய்து முடிக்க வேண்டியுள்ளன. முதலில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதி கட்ட போரின் போது இங்கிருந்து வெளியேறிய மக்கள் தற்போது இங்கு வந்து மீண்டும் குடியமர்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் மறு வாழ்வு சீரமைப்பு, வெளியேறியவர்களை மீண்டும் குடியமர்த்துதல் போன்றவை முழுமை அடைந்து வருகிறது. இவை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கிறோம். இங்கு வாழும் மக்களின் வாழ்வாதார பிரச்சினையும் உள்ளது. இவை அனைத்தும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் இங்கு கவுன்சில் தேர்தல் நடத்தப்படும்.
வடக்கு பகுதியில் தேவையான இடங்களில் மட்டுமே ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2011) நவம்பர் 28-ந்தேதி முதல் யாழ்ப்பாண சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அது குறித்த தகவல்களை உறுதி செய்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment