ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் வேடத்தில் நடிகர் அஜித் குமார் பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2 ஆம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக எப்படி ஒரு சாதரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
1983 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹொலிவுட் படம் ஸ்கார்பேஸ் சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்ட காசமாக ஓடிய திரில்லர் க்ரைம் படம் இத. கதை ரொம்பச் சின்னது. சியூபாவில் இருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேர்க்கிறார் அல் பசினோ.
அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கே தலைவனாகி அல் பசினோ அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்க அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தைத் தாராளமாகக் கொடுத்து உதவுகிறார்.
இந்தப் படத்துக்கு அப்போது சியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாõக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். சியூப மக்களை போதைப் பொருள் கடத்தல் காரர்களாக சித்திரிப்பதா என்று வரிந்து கட்டினர். ஆனால் படம் பெரு வெற்றி பெற்றது. அதைவிட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இப்போது பில்லாவுக்கு வருவோம், ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 இல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது அஜித். இங்கு வந்த பிறது அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment