எமது அன்பான உறவுகளே!
தமிழீழ தேசிய வானொலியான புலிகளின்குரல்,
தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து 2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது. அதன் பின்னர் இரண்டு மாத காலத்தில்,
தனது சேவையை கரும்புலிகள் நாளான யூலை 5ம் நாள் 2009ஆம் ஆண்டு மீண்டும் இணையத்தளத்தில் தொடங்கியது.
இதுவரை காலமும், எமது ஒலிபரப்புகளை இணைய வசதி இருப்பவர்களும்,
செய்கோள் வசதி உள்ளோர்களும் மட்டுமே தொடர்ந்து கேட்க முடிந்தது என்பதை நாம் அறிவோம்.
சிறப்பு நாட்களில் எமது ஒலிபரப்புகளை சிற்றலையூடாக உலகம் முழுவதும்; குறிப்பாக தாயகம் நோக்கி ஒலிபரப்பிய போதும், தொடர்ந்தும் வானொலியை கேட்க முடியாமல் உள்ளது என்பதை பல்லாயிரம் உறவுகள் எமக்கு தெரியப்படுத்திய வண்ணம் உள்ளார்கள்.
எதிரியின்
முற்றுகைக்குள் எமது மக்கள் வாழ்ந்தாலும் எமது மக்களின் சுதந்திர தாகத்தை விடுதலையின் பற்ருறுதியை எதிரியால் அழிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த புலிகளின் குரலை முடக்கவும், அதை இல்லாது அழிக்கவும்,
பல பொய்ப் பரப்புரைகளை கட்டவிழ்த்து விட சில சிங்கள கைக்கூலிகள் முயன்றபோதும், அத்தடைகளை தாண்டி எமது வானொலி இன்றுவரை தமிழீழ மக்களின் விடுதலைத் தாகத்தை சுமந்தபடி, மாவீரர்களின் நினைவுகளை தாங்கியபடி தொடர்ந்து ஒலித்து வருகின்றது.
அடுத்த கட்ட பரிமாணமாக உலகம் முழுவதும் புலிகளின்குரல் ஒலிபரப்புகள் சிற்றலையூடாக ஒலிக்கவுள்ளன என்பதை மனமகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
கரும்புலிகள்
நாளான யூலை 5ம் நாள் தாயக நேரம் இரவு 21.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை 12140 என்ற சிற்றலை அலைவரிசையூடாக கரும்புலிகள் நாள் சிறப்பு ஒலிபரப்பை தமிழீழம்,சிறிலங்கா,
இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கேட்க முடியும்.
தொடர்ந்து
ஒவ்வொரு சனி கிழமையிலும் தாயக நேரம் 21.00 மணி தொடக்கம் 22.00 மணி வரையும் எமது சிற்றலை ஒலிபரப்பு 12140 என்ற அலை வரிசையில் உலகம் முழுவதும் ஒலிக்கவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்
எத்தடைகள்
வரினும் அத்தடைகளை தாண்டி
தேசியக்குரலான
புலிகளின்குரல் முழு வீச்சுடன் தமிழீழ விடுதலை நோக்கி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
-நன்றி-
புலிகளின்குரல் நிறுவனம்
அனைத்துலக
ஒலிபரப்பு
யூலை 4 -
2012
No comments:
Post a Comment