முல்லை கனகரத்தினபுரத்தில் புலனாய்வு பிரிவினர் அடாவடித்தனம்! காட்டிக்கொடுக்கும் தமிழர்!
கடந்த இரண்டு மாதகாலமாக பன்னாகண்டல் கனகரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தலைவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் தினம் தினம் விசாரணைக்காக அழைத்து அடித்து சித்திரவதை செய்து வருகின்றனர்.
கடந்த ஆனிமாத காலப்பகுதியிலிருந்து கனகரத்தினபுரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் வீடு வீடாகச் சென்று பெயர், வயது, திருமணமானவரா?, விடுதவைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டவர்களா? போன்ற வினாக்கொத்துக்கள் அடங்கிய கோவையை பூர்த்திசெய்து வருகின்றனர்.
அத்தோடு குடும்பத் தலைவர்களை ஒட்டுசுட்டான் குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு வரும்படி கூறி அங்கு ஒருநாள் முழுவதும் உட்காரவைத்து விசாரணைகள் செய்து அடித்து சித்திரவதை செய்துவிட்டு நாம் அழைக்கும் போதெல்லாம் எமது அலுவலகத்திற்கு வரவேண்டும் வரமறுத்தால் என்ன நடக்கும் என்று ‘தெரியும்தானே’ என்று கூறி மிரட்டுகின்றனர். இதன் காரணமாக குறித்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுகின்றனர்.
குறிப்பாக கடந்த 20.06.2012ம் திகதி அன்று சசிக்குமார் சந்திரன் (மூன்று பிள்ளைகளின் தந்தை அன்றாடம் கூலிவேலைசெய்து குடும்பத்தை பராமரிப்பவர்) என்பவரை ஒட்டுட்டான் குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டுமென்று அழைத்திருந்தனர். சந்திரன் அன்றையதினமே குற்றபுலனாய்வு அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சென்ற சந்திரனை குற்றப்புலனாய்வு அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திய நபர் நீ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தநீர் தானே ஏன் புனர்வாழ்விற்கு செல்லவில்லை என்று கூறி சரமாரியா அடித்து ஆயுதங்கள் எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டு சித்திரவதை செய்து விட்டு நாம் கூப்பிடும் போது வரவேண்டுமென்று கூறி அனுப்பிவைத்தனர்
இவ்வாறு குறித்த கிராமத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் அட்டகாசம் அரங்கேறிவருவதற்கு அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் தேசவிரோத தமிழர்கள் ஒருவரே காரணம் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment