Translate

Sunday 8 July 2012

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 5-வது முறையாக சாம்பியனானார் செரீனா வில்லியம்ஸ்


serenawilliams1-300விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செரின்னா வில்லியம்ஸும் அக்னீஸ்காவும் மோதினர்.

முதல் செட்டில் 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் செரீனா கைப்பற்றினார். 2-வது செட்டில் செரீனா தடுமாற அது அக்னீஸ்காவுக்கு சாதகமானது. 5-7 என்ற கணக்கில் செரீனா செட்டை இழந்தார்.
கடைசி செட்டில் தொடக்கத்தில் பின்னடைவில் இருந்தார் செரீனா. பின்னர் உஷாராக ஆடி விம்பிள்டன் போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செரீனா.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் செரீனா 6-வது இடத்தில் இருக்கிறார். 1990-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை தனது 33 வயதில் மார்ட்டினா நவரத்திலோவோ கைப்பற்றினார். அதன் பின்னர் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் 30 வயதான செரீனாவுக்கு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment