கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் வர்ணங்களை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு மாறுபட்ட இசையை உருவாக்கக் கூடிய Eye Music எனும் நவீன கருவி ஒன்று

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஜெருசலேம் நகரிலுள்ள ஹேப்றி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐந்து வகையான நிறங்களை இனம்கண்டு அவற்றிற்குரிய சமிக்ஞைகளை ஒலி வடிவில் கொடுப்பதற்கென இசைகளை உள்ளடக்கியதாக இக்கருவியில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
EyeMusic கருவியால் இனம்காணக்கூடிய நிறங்களும் அவற்றிற்கான இசைகளும், நீலம்-trumpets, சிவப்பு-reggae organ,பச்சை-synthesized reed, மஞ்சள்-violin, ஆக அமைவதுடன் கறுப்பு நிறத்தினை அடையாளம் காட்டும்போது எந்தவிதமான ஒலியையும் எழுப்பாது.
மேலும் நிறங்களை கண்டறிவதற்கென குறித்த கருவியில் விசேட வீடியோக்கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment