Translate

Friday, 13 July 2012

5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்.


5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்.

olympics20125 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.
2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழினவழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.
3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்.
5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பிஅனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.
இக் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தர்ப்பம் இது. எனவே எம்மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா.-

No comments:

Post a Comment