Translate

Friday 13 July 2012

மத வழிபாட்டு உரிமை மறுப்பும் இனஅழிப்பின் ஒர் அங்கமே : தமிழகத்தில் சர்தவ மத தலைவர்கள் முழக்கம் !


மத வழிபாட்டு உரிமை மறுப்பும் இனஅழிப்பின் ஒர் அங்கமே : தமிழகத்தில் சர்தவ மத தலைவர்கள் முழக்கம் !

srilanka-1ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது இனவழிப்பின் ஓர் அங்கமாக இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களது மத வழிபாட்டு உரிமைக்கான மாபெரும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலொன்று தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் – சென்னை இந்த ஆர்ப்பாட்டஒன்றுகூடலை முன்னெடுத்திருந்தது.

உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் உரிமைகளையும், நீதியையும், விழுமியங்களையும் தன் காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசை எதிர்த்தும், ஈழத்தில் குரலற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யவும் தமிழ் பேசும் இந்துக்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அணிதிரளுமாறு அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் அழைப்பு விடுத்திருந்ததது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (10-07-2012) சென்னையில் இடம்பெற்றிருந்த இந்த ஆர்ப்பாட்டஒன்கூடலில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின் அவை உறுப்பினர்களான பேராசிரியர் சரஸ்வதி  மற்றும் வழக்கறிஞர்பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்கள் தலைமையேற்றிருந்தார்.
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் ஐதர் அலி, தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயம், இந்திய சுயாதின திருட்சபை பிஷப் டேவிட், இந்திய சுதந்திர திருச்சபை பிஷப் பிரகாஷ், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்கீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முகமது முனீர், உளுந்தூர்பேட்டை அப்பர்சாமி மடத்தின் தலைவர் சிவஞான தேசிக சுவாமிகள், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இஸ்மாயில், கிறிஸ்தவ கூட்டமைப்புத் தலைவர் போதகர் விக்டர் தர்மராஜ்இ இந்திய கிறிஸ்தவ மக்கள் கட்சித் தலைவர் நாதன், மற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் தொடர்பில் அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் விடுத்திருந்த அறிக்கையின் முழுவிபரம் :
‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற போர்வையில், சிங்கள பௌத்த பேரினவாத அரசு, தமிழீழத்தில் தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்தொழிப்பதை மேற்கொண்டது என்ற உண்மை அனைவரும் அறிந்ததே.
உலக மக்களின் ஒட்டு மொத்த மனச்சாட்சியை உலுக்கிய, ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுக் குவித்த முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னும், தமிழீழத்தில், தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.
ஈழத் தமிழர்களை அழிப்பதுடன், அவர்களின் பாரம்பர்ய நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்வதோடு, தமிழர்களின் மதம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றாகத் துடைத்தழிப்பதைத் தன் முக்கிய வேலைத் திட்டமாகக் கொண்டு இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இலங்கையை, ஒரு இன, ஒரு மத, ஒரு மொழி நாடாக மாற்றுவதற்கான அனைத்து திட்டங்களையும், செயல்களையும் மேற்கொண்டது, மேற்கொண்டும் வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.
இந்துக் கோயில்கள் இடிப்பு
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் இலங்கை இராணுவத்தால் இடித்துத் தள்ளப்பட்டன. பௌத்தம் இலங்கையில் நுழைவதற்கு முன்பிருந்தே புகழ் பெற்று விளங்கிய இந்துக் கோவில்களான நல்லூர் முருகன் கோவில், திருக்கேத்தீ°வரம், திருக்கோணே°வரம், நகுலே°வரம், முன்னே°வரம் மற்றும் தொண்டீ°வரம் கோவில்கள் இப்பொழுது சிங்கள பௌத்த இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம், இந்துமத அடையாளங்கள் நிரம்பி இருந்த தமிழ்ப் பிரதேசங்களில் புத்த விஹாரைகளும், °தூபிகளும், புத்தர் சிலைகளும் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன.  இந்துக் கோவில்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கின்றன.
கிறித்துவத் தேவாலயங்கள் தகர்ப்பு
முன்னூறுக்கும் மேலான கிறித்துவத் தேவாலயங்கள் – குறிப்பாகப் பேசாலை, மடு, நாவலி, குருநகர், மட்டகளப்பு, முல்லைத் தீவு, மாத்தளை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி ஆகிய ஊர்களிலிருந்த தேவாலயங்கள் ஆயுதம் தாங்கிய சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளாலும், இராணுவத்தாலும் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன.
தேவாலயங்கள் தகர்க்கப்பட்டதோடு, கத்தோலிக்கக் குருமார்களைக் கொலை செய்தும், கடத்திச் சென்றும் காணாமல் போகச் செய்தும் சிங்கள பௌத்தம் வெறியாட்டம் போடுகிறது. கடத்திக் கொலை செய்யப்பட்டவர்களில் சிலர்:
1.  அருட்தந்தை மேரி ப°தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டார்)
2. அருட்தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்)
3. அருட்தந்தை திருச்செல்வம் நிகாய் ஜிம் பிரவுன் (கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்)
4. அருட்தந்தை பாக்கிய ரஞ்சித் (கொலை செய்யப்பட்டார்)
5. அருட்தந்தை சேவியர் கருணா ரத்தினம் (கொலை செய்யப்பட்டுள்ளார்)
6. அருட்தந்தை ஜோசப் 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளார். இவர் யாழ் புனித சம்பத் அரசியார் கல்லூரி முன்னாள் அதிபர். இவரை இலங்கை அரசின் ஆயுதப்படைக் கூட்டிச் சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். இவருக்கு என்ன நேர்ந்தது என்று இதுவரைத் தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்ற உண்மைச் செய்தியை வெளி உலகுக்கு கொண்டு வந்து, ஐ.நா. சபை வரைக் கொண்டு சென்றமைக்காக, மன்னார் மறை மாவட்டக் கத்தோலிக்கப் போராயர் ஜோசப் இராய்ப்பு அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இசுலாமிய வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்
சிங்கள பௌத்தத்திற்கு இந்துக்கள், கிறித்துவர்கள் மட்டும் எதிரிகளல்லர். இசுலாமியர்களும் எதிரிகளே!
அண்மையில், மாத்தளம் தம்புள்ளெ பள்ளி வாசலை, வெறி பிடித்த சிங்கள பௌத்த பிக்குகுள், கடப்பாரை கொண்டு இடித்துத் தகர்த்தனர். இலங்கை அரசும், இராணுவம் ஊக்குவித்தன. காலியில் இருக்கும் மசூதிக்குள் சிங்களபௌத்த வெறியர்கள் ஒரு இறந்த நாயின் உடலை வீசியெறிந்து அவமானப்படுத்தியுள்ளனர். மசூதி முழுவதிலும், நாயின் இரத்தம் தெளிக்கப்பட்டது.  முஸ்லீம் பள்ளி வாசல்களும், மதரசாக்களும், முனபு பௌத்த விகாரைகள் இருந்த இடங்களை இடித்துவிட்டுக் கட்டப்பட்டவை என்று பொய்க் காரணம் காட்டி, இலங்கை முழுதுமுள்ள இசுலாமிய வழிபாட்டுத் தலங்களையும் மதரசாக்களையும் கணக்கெடுக்க உத்தரவிட்டிருக்கும் சிங்களப் பேரின வெறி பிடித்த அரசு. கொழும்பிலிருக்கும் இசுலாமிய சிறுகடை வியாபாரிகளையும் அச்சுறுத்தி விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறது.
மத உரிமையும், வழிபாட்டு உரிமையும், உலகளாவிய அடிப்படை மனித உரிமைகளில் முக்கியமானவை. இதை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதச் சுதந்திரத்தை வலியுறுத்துவதற்காக ஐ.நா. ஒரு ஆணையத்தை ஏற்படுத்திச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் உரிமைகளையும், நீதியையும், விழுமியங்களையும் தன் காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் இலங்கையின் பேரினவாத அரசை எதிர்த்தும், ஈழத்தில் குரலற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யவும் தமிழ் இந்துக்களும் தமிழ் கிறித்துவாகளும் தமிழ் இசுலாமியர்களும் தாங்களாகவே இணைந்து போராட அழைக்கிறோம்!
இவ்வாறு அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்செல்ல

No comments:

Post a Comment