தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில்
விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவைக் கோரினார்!
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இன்று (7-7-2012) மாலை 5.45 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தொல்.திருமாவளவன் அவர்களிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கடசியின் ஆதரவைக் கோரினார். இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்பாக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதில் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தறிய விரும்புவதாகவும் தொல்.திருமாவளவன் அவர்களிடம் மாண்புமிகு மன்மோகன் சிங் கேட்டார்.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு. ஆகவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரையே விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்போம் என்று மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களிடம் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment