Translate

Thursday, 5 July 2012

பிரிட்டனைப் பார்!


பிரிட்டனைப் பார்!

கிறித்துவ மதத்தவர்கள் அதிகம் வாழும் இங்கிலாந்தில் சர்ச்சுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மத அடிப்படையில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களிலும் மாறுதல் புயற்காற்று வீச ஆரம்பித்து விட்டது.
1837 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திருமணங்கள் செய்யப்பட்டு வந்தன. இதிலும் அதிரடி மாற்றம் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் இரவு - பகல் பாராமல் எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முக்கியமாக தேவாலயங்களில், அவை திறந்திருக்கும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மற்ற மற்ற இடங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் 15 நாள்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாகத் தெரிவித்து அதன்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்து மதவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இங்கிலாந்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை யாளர்கள் இத்தகு மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இங்கு அத்தகு நிலை ஏற்பட அனுமதிப் பார்களா? ஒரு பகல் நேரத்தை இராகுகாலம், எமகண்டம், குளிகை என்று பிரித்து வைத்து நான்கரை மணி நேரத்தைக் கெட்ட காலம், அபசகுனமான நேரம் என்று சொல்லி காலத்தை கரியாக்குபவர்கள் உலகத்தில் இந்து மதக்காரர்களைத் தவிர வேறு யார் இருக் கிறார்கள்? காலம் கண்போன்றது என்பார்கள். பொருளை இழந்தால் சம்பாதித்துக் கொள்ள லாம்; ஆனால் காலத்தைப் பறி கொடுத்தால் இழந்தது இழந்ததுதான்.
இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வீச்சால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான், இன்று பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் இராகு காலம், எமகண்டம் பார்த்தா? உழைப் பாலும், அறிவைப் பயன்படுத்தித் திட்டமிடுத லாலும்தானே அது உயர்ந்த முகட்டை எட்டியுள்ளது!
நல்ல நேரத்தில் திருமணம் செய்து கொண் டால்தான் அவர்களின் வாழ்க்கை நலமாக, வளமாக இருக்கும் என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம்.
தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, ஆத்திகர்கள் நடுநடுங்கும் இராகு காலத்தில் கறுஞ்சட்டைத் தோழர்கள்  திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் கெட்டுப் போய் விட் டார்களா? நல்ல நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா? இவற்றிற்கான  புள்ளி விவரங்களை ஆன்மீக ஏடுகளாவது வெளியிட்டதுண்டா?
இராமாயணத்தில் ராமனுக்கும், சீதைக்கும் பொருத்தம் பார்க்கப்படவில்லையா? முகூர்த்த நேரம் கணிக்கப்படவில்லையா? ராமன் பட்டாபிஷேகம் சூடுவதற்கு நேரம் நிர்ணயிக் கப்படவில்லையா? அவன் வாழ்வில் இந்த இரண்டு நிகழ்வுகளுமே தலை கீழாகப் போய் விட்டனவே! நிறைமாத கர்ப்பிணியான சீதை, காட்டில் கொண்டு போயல்லவா விடப்பட்டாள்?
கடைசியில் ராமன் சரயூ நதியில் விழுந்து தானே தற்கொலை செய்து கொண்டான்! சீதை, பூமி பிளந்தல்லவா தற்கொலை செய்து கொண்டாள்!
இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதில் கூட பார்ப்பனர்கள் நல்ல நேரம் குறிக்க வில்லையா? இரவில் வாங்கப்பட்ட சுதந்திரம். இன்னும் விடியவில்லையே!
இங்கிலாந்தைப் பார்த்தாவது இந்தியர்களே! மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்! வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment