தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தான் பொலிஸ் மா அதிபருக்கும், யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.
நீதித்துறைக்கும் தனக்கும் நேரடியாகவும் பத்திரிகை மூலமும் மிரட்டல் விடுக்கும் வண்ணம் சுமந்திரனும், பிரேம்நாத்தும் பத்திரிகை ஊடாக கருத்து வெளியிட்டுள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா அத தெரண தமிழிணையத்திடம் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்தே குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படி பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் பணித்துள்ளதாக மா.கணேசராஜா அத தெரண தமிழிணையத்திடம் குறிப்பிட்டார்.
(அத தெரண - தமிழ்)

No comments:
Post a Comment