Translate

Thursday, 5 July 2012

தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கைது


தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கைது
சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். 

தடையை மீறி ஊர்வலம் சென்றதாக மதிமுகவினர் 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான தளத்தை முற்றுகை இட முயன்ற நாம் தமிழர் கட்சியினரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது மன்னிக்க முடியாத துரோகம் என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர். 

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை விமானப்படையினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். 

(தினகரன்) 

No comments:

Post a Comment