Translate

Tuesday 10 July 2012

படைக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் காணமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் நிலை தெரியவில்லை.


கடந்த யுத்த காலத்தின் போது மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரியாத நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

காணமல் போனவர்களது உறவினர்களை ஊடகவியலாளர்கள் சந்தித்த போதே அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த யுத்தம் இடம் பெற்ற காலத்தில் படைக்கட்டுப்பாட்டு பிரதேசமாகக் காணப்பட்ட மன்னார் தீவுப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் காணமல் போயுள்ளனர். இவர்களில் பலர் வேலையின் நிமித்தம் வீடுகளில் இருந்து வெளியில் சென்ற போது காணாமல் போயுள்ளனர்.

ஏனையவர்கள் வீடுகளில் வைத்து நள்ளிரவில் வரும் ஆயுதக்குழுக்களினால் விசாரனை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் எவருமே இது வரை வீடு திரும்பவில்லை.
காணாமல் போன, கடத்தப்பட்டவர்களில் சிலர் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்களின் நிலை இது வரை என்னவென்று தெரியவில்லை.ஏன்? எதற்காக? இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்ற விடயங்கள் கூட இது வரை தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளைக்கடக்கின்ற போதும் இது வரை அவர்கள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையாகவுள்ள பலர் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடதப்பட்டு சுமார் 6 வருடங்கள் கடந்த போதும் இது வரை எவ்வித முடிவும் இல்லாத நிலையில் உள்ளனர். குடும்பத்தலைவன் இல்லாததன் காரணத்தினால் அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

பல பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன, கடத்தப்பட்டவர்களது நிலைமை தொடர்பில் இது வரை அரச அதிகாரிகள் எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் உள்ளதாகக் காணாமல் போனவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
எனவே, உரிய அதிகாரிகளும், அரசாங்கமும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி மன்னார் மாவட்டத்தில் காணமல் போனவர்களது நிலை குறித்து உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://thaaitamil.co...ுப்பாட்டு-பகுத/ 
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

http://thaaitamil.com/

No comments:

Post a Comment