Translate

Saturday 7 July 2012

ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்கிறது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்


விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்கிறது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2005ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு ஓராண்டுகடந்த நிலையில் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால் அனுப்பி வைக்கப்பட்டகுறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என பிளக் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தெளிவான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கத் தவறியுள்ளதாக் குறிப்பிட்டுள்ளார்.
 
இனப்பிரச்சினை தொடர்பான அதிகளவு குற்றச்சாட்டுக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அரசாங்கம் தீர்வு காண்பதில் முனைப்புகாட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
தமிழர் விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் வாக்குறுதிகள் பல இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உதாரணமாக பாடசாலைகளில் இரண்டு மொழிக் கல்வியை அமுல்படுத்தும் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல்வாதி என்ற ரீதியில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சராசரியான புள்ளிகளையே வழங்க முடியும் என பிளக்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி இந்த குறிப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது புத்திஜீவிகளும் கொழும்பு செல்வந்தபிரபுக்களும் அதிக விருப்பம் கொண்டிராத போதிலும், பெரும்பான்மை சிங்கள மக்கள்மரியாதை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
தென் பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் சிரத்தை காட்டி வருவதாக அப்போதைய அமெரிக்கத் தூதுவர்பிளக், ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள குறிப்பில்சுட்டிக்காட்டியுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
 
நன்றி : விக்கிலீக்ஸ் மற்றும் கொலம்போ ரெலிகிராப்

No comments:

Post a Comment