Translate

Saturday, 7 July 2012

ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து


ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கைவரவிருந்த இந்தியப் பாடகர் ஹரிஹரனின் விஜயம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்று (07) மாலை 7 மணிக்கு கொழும்பு - 7 புளும்பீல்ட் மைதானத்தில் நடைபெறவிருந்த நேரடி இசை நிகழ்ச்சியான ''ஹரிஹரன் லைவ் இன் கொன்சர்ட்'' இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இசை நிகழ்ச்சிகான நுழைவு சீட்டுக்களை பெற்று கொண்டவர்கள் பெற்று கொண்ட இடங்களிலே மீள நிதிகளை பெற்று கொள்ள முடியும் என இசைநிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

ஹரிஹரன் இலங்கை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என தென்னிந்தியாவின் ''மே 17 இயக்கம்'' என்ற அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment