மனோ கணேசன்
தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
ஏற்பாட்டாளர்- மக்கள் கண்காணிப்பு குழு
அலுவலகம்: #72 பாங்சால் வீதி கொழும்பு 11 - தொலபேசி (94 )11-27473511 - தொலைநகல்: (94 )11-2435961 அஞ்சல் பெட்டி: 803 கொழும்பு - மின்னஞ்சல்: ganesan@eureka.lk; leader@dpflanka.org - கைப்பேசி: (94 )777312770
தலைவர் - ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
ஏற்பாட்டாளர்- மக்கள் கண்காணிப்பு குழு
அலுவலகம்: #72 பாங்சால் வீதி கொழும்பு 11 - தொலபேசி (94 )11-27473511 - தொலைநகல்: (94 )11-2435961 அஞ்சல் பெட்டி: 803 கொழும்பு - மின்னஞ்சல்: ganesan@eureka.lk; leader@dpflanka.org - கைப்பேசி: (94 )777312770
மனோ கணேசன் அவர்களே, நீங்கள் டெசோ மாநாட்டிற்கு போக போகிறீர்களாமே?
இன்று பிற்பகல் எனக்கும், இலங்கையின் பிரபல சிங்கள நாளேடு ஒன்றின் ஒரு சிங்கள பெண் செய்தியாளருக்கும் இடையில் சிங்கள மொழியில் நடந்த தொலைபேசி-பேட்டி உரையாடல்:
மனோ கணேசன் அவர்களே, நீங்கள் டெசோ மாநாட்டிற்கு போக போகிறீர்களாமே?
அது தொடர்பில்,இன்னமும் முடிவு செய்யவில்லை.
நீங்களா, யார் முடிவு செய்வது?
கட்சி தலைமை குழு
எப்படியும் போவீர்கள்தானே?
அதுதான் சொன்னேனே! முடிவு செய்ய வில்லை. நீங்கள் நான் அங்கு போவதை விரும்புகிறீர்களோ
சரி, போனால் என்ன பேசுவீர்கள்?
என்ன பேச வேண்டும் என எதிர்பார்கிறீர்கள்
இல்லை தமிழீழம் பற்றி பேசுவீர்களா?
தமிழீழம் பற்றி பேச மாட்டேன். அதுபற்றி என்னைவிட நன்றாக பேசுவதற்கு தமிழகத்திலேயே நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நான் போனால் எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் பற்றி பேசுவேன்.
சரி, என்ன பேசுவீர்கள்?
அதாவது போனால்
சரி, போனால் என்ன பேசுவீர்கள்?
திட்டமிட்ட குடியேற்றம் பற்றி, ராணுவ முகாம் அமைக்க நமது மக்களின் மண்ணை அபகரிப்பது பற்றி, சொந்த நிலங்களை தேடிதாய் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்த தமிழர்களை கொலை செய்வது பற்றி, உழைத்து உழைத்து உருகுலைந்து போயுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றி, காணாமல் போனவர்கள்- கடத்தப்பட்டுகொலை செய்யப்பட்டவர்கள்- தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பற்றி, இந்து-இஸ்லாமிய-கிறிஸ்துவ வணக்க ஸ்தலங்கள் தாக்கப்படுவது பற்றி, வட பகுதி மீனவர் வாழ்வுரிமை பற்றி, 13 ம் ப்ளஸ் என்று சொல்லி விட்டு 13 மைனஸ் ஆக்கிவிட்டதை பற்றி , புலிகளின் தோல்வியை தமிழ்-முஸ்லிம் மக்களின் தோல்வியாக உருமாற்றி முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் பேரினவாதம் பற்றி மற்றும் முக்கியமாக காஷ்மீர் பிரச்சினைக்கும், இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை பற்றி,அங்கு வரும் தென்னிந்திய-வட இந்திய தலைவர்களுக்கு புரியும் விதத்தில் நல்ல தமிழிலும்-முறையான ஆங்கிலத்திலும் சொல்லுவேன்
கருணாநிதி, இலங்கையில் தமிழீழம் அமைக்க இந்தியாவில் மாநாடு நடத்துவது சரியா?
அதை அவரிடம் கேளுங்கள். அல்லது மன்மோகன் சிங்கிடம் கேளுங்கள்.
நீங்கள் சொல்லுங்கள் அது சரியா, பிழையா ?
அது சரி இல்லை, பிழைதான். ஆனால் அதுபோல், முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் நடவடிக்கைகளை அரச ராணுவ பலத்துடன் செய்வதும் பிழை. நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ம் திருத்த சட்டத்தை கூட அமுல் செய்ய விடாமல் தடுப்பதும் பிழை.
அவை நமது நாட்டு பிரச்சினைகள் அல்லவா?
ஆம். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே இந்த பிரச்சினைகள். உங்களுக்கு இல்லை.
அதை ஏன் நீங்கள் வெளிநாட்டில் சென்று சொல்கிறீர்கள்?
உங்கள் வயது என்ன, இந்த கேள்விக்கு விடையை நீங்கள் பிறக்கும் முன்னமேயே சொல்லிவிட்டோம். தெரியாவிட்டால், 1989 இல் சிங்கள இளைஞர்கள் கொலை செய்யப்பட்டபோது அதுபற்றி வெளிநாடு சென்று முறையிட்ட மகிந்த ராஜபக்ச என்பவரிடம் போய் கேளுங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு இன்னொருநியாயமா....... நீங்கள் நான் சொல்லும் நியாயங்களை கேட்க தயார் இல்லை. நான் டெசோ மாநாட்டிற்கு செல்ல வேண்டும். அதை பரபரப்பு செய்தியாக்க வேண்டும். அது மட்டும்தான் உங்கள் ஒரே நோக்கம். நான் இதுபற்றி முடிவு செய்தவுடன் என்னை மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களுக்கு கோபம் வருகிறது, மனோ கணேசன் அவர்களே.
ஆமாம், கோபம் வருகிறது. நான் ஒரு கோபக்காரன்தான், ஆனால் நான் ஒரு தெரு சண்டியன் இல்லை. எனது கோபம் ஒரு நாகரீக மனிதனின் நாகரீக கோபம்.
(தமிழ் மொழியில்) நன்றி, நன்றி, நன்றி... மிஸ்டர் மனோ கணேசன்.
No comments:
Post a Comment