Translate

Monday, 30 July 2012

தடையை நீடிப்பதாக அறிவிக்கும் பாரதமே! எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்!! - தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர் புகழேந்தி தங்கராஜ்



தடையை நீடிப்பதாக அறிவிக்கும் பாரதமேஎங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்!!

  • உலகின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்தியாநீட்டித்திருப்பது வேண்டுமானால் வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். 'அதை ஆதரிக்கும் இயக்கங்களேதனி நபர்களேஉஷார்என்று உதார் விடுவதுதான்எரிச்சலை ஏற்படுத்துகிறதுஇதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய்வெளியே ராமதாஸே வந்து பூட்டுப் போடுவதைக்கூட உணராதவர்களாய்டாஸ்மாக்உள்ளே உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தோமென்றால்உண்மையிலேயே நாம் யார்விடுதலைப் புலிகளை ஆதரிப்பது ஏன் - என்பதை பகிரங்கமாகஇப்போது சொல்லாமல்வேறெப்போது சொல்லப்போகிறோம் நாம்
    விடுதலைப் புலிகளை இவர்கள் தவறாகச் சித்தரிப்பது ஏன்அவர்கள் மீதான இவர்களது குற்றச்சாட்டுகளை எதனால் மறுக்கிறோம்புலிகளின் தமிழீழக்கோரிக்கை எவ்வளவு உன்னதமானதுஉண்மையானது.... என்பதையெல்லாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறதுஆனால்அதற்குமுன்தடை குறித்தஅறிவிப்பிலுள்ள விஷமத்தனமான வார்த்தைகளை அம்பலப்படுத்துவது அவசியமாகிறதுவெறும் வார்த்தைகள் தானே என்றுபடித்து முடித்ததும் அடுத்தபக்கத்துக்குப் போய்விட முடியவில்லைஅந்த அளவுக்கு நயவஞ்சகமான வார்த்தைகள் அவை.
    அரசின் அறிவிப்பை எழுதுகிற இடத்தில் இருப்பவர்கள்விவரம் அறியாதவர்களாக இருக்க முடியுமாவெற்று வார்த்தைகளைப் பயன்படுத்திவெத்துவேட்டுகளைத் தயாரிக்க அவர்கள் என்ன கோபாலபுரத்திலா குடியிருக்கிறார்கள்தலைநகர் டெல்லியில்சிவகங்கை 'வெற்றிவீரர்.சிதம்பரத்துக்குப்பக்கத்திலேயே இருப்பவர்கள் அவர்கள்அறியாமலோ தெரியாமலோ அவர்கள் இதை எழுதியிருக்க முடியுமாதெரிந்தே தான் இதிலுள்ள ஒவ்வொருவார்த்தையையும் எழுதியிருக்கவேண்டும் என்பதால்இதை அலசுவதற்கு முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது.
    விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய மக்களுக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.. தமிழ்நாட்டிலுள்ள ஆதரவு இயக்கங்கள் மூலம் தங்களுக்குஆதரவு திரட்ட புலிகள் முயல்கிறார்கள்... புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இதன் பின்னணியில் உள்ளனர்... என்றெல்லாம்குற்றப்பத்திரிகை வாசிக்கிறதுஅந்த அறிவிப்புஇதெல்லாம் உப்புக்கும் உதவாத மொக்கைவாதம் என்பது அவர்களுக்குத் தெரியும்நமக்கும் அது புரிகிறது.
    அந்த அறிவிப்பு எடுத்துவைக்கும் அடுத்த வாதம்தான் ஆபத்தானதுபோரில் புலிகள் தோற்றதற்குஇந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம்என்று இணையதளங்கள் மூலம் செய்தி பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது அரசின் அறிவிப்புமிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் சாமர்த்தியமாகக்கோர்க்கப்பட்டுள்ள வாக்கியம் இதுஇந்த வரியில் பிற்பாதி மெய்முற்பாதிபிரச்சினையைத் திசைதிருப்பப் பயன்படுத்தப்படும் வடிகட்டியபொய்.
    ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியத் தலைவர்களும் உயர் அதிகாரிகளும்தான் காரணம் - என்பது நாம் ஒவ்வொருவரும் சுமத்தும் வெளிப்படையானகுற்றச்சாட்டுஇவர்கள்தான் கருவிகளைக் கொடுத்தார்கள்இவர்கள்தான் பயிற்சி கொடுத்தார்கள்அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்என்கிற வேண்டுகோளைக் காதில் வாங்க மறுத்தார்கள்தமிழ்ச் சொந்தங்களைக் கொன்றுகுவித்த பொன்சேகா தான் உலகின் சிறந்த தளபதி என்றுதட்டிக்கொடுத்தார்கள்ராஜபட்சேவை உலகே கண்டித்தபோதும் கட்டிப்பிடித்தார்கள்இதனாலேயேஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்கள் விரட்டி விரட்டிக்கொல்லப்பட்டதற்கு இந்தத் தலைவர்களும் அதிகாரிகளும் தான் காரணம் என்று திட்டவட்டமாக - தெளிவாகக் குற்றஞ்சாட்டுகிறோம் நாம்விடுதலைப் புலிகளின்தோல்விக்குத் தான் நாங்கள் காரணமாக இருந்தோம்அதற்காகத்தான் நீங்கள் எங்களைக் கண்டிக்கிறீர்கள் - என்று பிளேட்டைத் திருப்பப் பார்க்கிறார்கள்இவர்கள். .
    நடந்தது இனப்படுகொலை - என்பதை உலகம் முழுக்க வியாபித்திருக்கிற புலம்பெயர் சொந்தங்கள் அவர்கள் இருக்கிற நாடுகளின் அரசுகளிடம் ஆதாரத்துடன்எடுத்து வைக்கின்றனர்அனைத்து நாடுகளிலும்இலங்கைக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுகின்றனர்அவர்கள் என்ன இந்தியா மீது நடவடிக்கைஎடுங்கள் - என்றா போராடுகிறார்கள்இனப்படுகொலை செய்த இலங்கை மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் போராடுகிறார்கள்உலகெங்கும் வீதிகளில்கொட்டுகிற பனியில் குளிர்க் குல்லாய்களை அணிந்திருக்கும் குழந்தைகளுடன் நின்று நியாயம் கேட்கிறார்கள்அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்என்பதுகூட தெரியாத அளவுக்கா இருளில் இருக்கிறது இந்திய உள்துறைபுரியவில்லை.
    ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே - என்று இங்கேயிருக்கிற நாம்கோபப்படுகிறோம்தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம்இந்த உண்மை தெரிந்தும்ஒன்றுமேதெரியாதவர்களைப் போல்புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் - என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால்ஒன்றரைலட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்குவேறெது மிஞ்சும்எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால்ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்?
    இனப்படுகொலை செய்த இலங்கையைக் கண்டித்து .நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடித்து இலங்கையைக் காப்பாற்றியது எங்கள்இந்திய அரசுகாமன்வெல்த் போட்டிக்குசூடு சுரணை வெட்கம் மானம் எதுவுமே இல்லாமல்ராஜபட்சே என்கிற மனித மிருகத்தை அழைத்து கௌரவித்தது இதேஇந்திய அரசுஇந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதாக நடித்துஇனப்படுகொலைபோர்க்குற்றம் - என்கிற வார்த்தைகளேஅந்தத் தீர்மானத்தில் இல்லாதபடி கூடவே இருந்து குழிபறித்துஉயிர் நண்பன் ராஜபட்சேவை மீண்டும் காப்பாற்றியிருக்கிறது இந்தியாஇதையெல்லாம்பார்த்தபிறகும் உணர்ச்சி வசப்படாதிருக்கஉப்பு போடாமலா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் அத்தனைத் தமிழனும்ராஜபட்சேவைக் காப்பாற்ற உன்னுடையவெளியுறவுத் துறை வேலை செய்யும்உள்துறை வேலை செய்யும்பாதுகாப்புத் துறை வேலை செய்யும்... இருக்கிற அத்தனைத் துறையும் வேலை செய்யும்......!ஒன்றரை லட்சம் உயிர்களை... எங்கள் ஒன்றரை லட்சம் சொந்தங்களைக் காப்பாற்றுவதென்றால் மட்டும் உன்னுடைய எல்லாத் துறைகளும் பஞ்சர்ஆகிவிடுமென்றால்என் வணக்கத்துக்குரிய தாயகமேபாரதமே... எங்களுக்கு நீ யார்?
    போர்க்குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்துஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதி - என்றெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுமாதங்கள் பல ஆகிவிட்டனஅந்தத் தீர்மானம் என்னஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலா நிறைவேற்றப்பட்டதுஏழு கோடி தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் தீர்மானம்அந்தத் தீர்மானம்ஏழு கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தப் பேரவைக்கென ஒருஇறையாண்மை இருக்கிறதாஇல்லையாஎன்ன ஆனது அந்தத் தீர்மானம்பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடப்பட்டுவிட்டதாஆல் இன் ஆல்அழகுராஜா நாராயணசாமியிடம்தான் கேட்கவேண்டும்அந்தத் தீர்மானம் குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்தால்ஏட்டிக்குப் போட்டியாக உள்துறையின்அறிவிப்பைக் குப்பைத்தொட்டியில் போடுவோம் என்று அறிவித்தால்இந்தியாவுக்கு அது பெருமை சேர்ப்பதாகவா இருக்கும்?
    இந்திய எல்லையிலிருந்து 26 கிலோமீட்டரில் இருக்கும் பாகிஸ்தான் பகுதியொன்றில் 100 சீக்கியர்கள் கொல்லப்பட்டிருந்தால்இந்தியா கைகட்டி வேடிக்கைபார்த்திருக்குமாஇன்னும் 100 பேர் எங்கேயென்று கண்டறிந்து கொல் - என்று ராடார் கொடுத்திருக்குமாநூறுபேர் கொலைக்காகஇந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் யுத்தமல்லவா நடந்திருக்கும். 26 கிலோமீட்டரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மட்டும் இந்தியா வேடிக்கை பார்த்தது,கொலைகாரர்களுக்கு உதவியதுகொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டு விடாதபடி பார்த்துக்கொள்கிறது என்றால் என்ன அர்த்தம்இந்தத் தமிழினவிரோதத்துக்காகத் தான்ஓன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்ததற்காகத் தான்சுயநல அரசியல் வாதிகளையும்அதிகாரிகளையும் கண்டிக்கிறோம்இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் போல்திசைதிருப்பும் நடவடிக்கையில் மத்திய அரசின் உள்துறை இறங்குவது,தமிழினத்தின் திசையைத் திரும்பிவிட்டுவிடும்உள்நோக்கத்துடன் அறிவிப்புகளை எழுதுபவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    குழந்தைக்கு எப்படிச் சோறூட்டவேண்டும் - என்பதை அறியாத தாய்தான், 'பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக் கொடுத்துடுவேன்என்று மிரட்டுவாள்அப்படித்தான்பூச்சாண்டி காட்டுகிறது.சிதம்பரத்தின் உள்துறைபுலிகளை ஆதரிப்பவர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்களாம்அதைவிட உன்னிப்பாக இலங்கையைஆதரிப்பவர்களை நாங்கள் கவனிக்கிறோம் என்பதை இன்னுமா அவர்கள் அறிந்துகொள்ளவில்லை?
    மன்மத வேட்டைக்கு கஸ்டமரை ரகசியமாக அழைத்துச்செல்லும் ஏஜெண்டைப் போல்ரகசியமாகத்தான் அழைத்துவருகிறார்கள் இலங்கை விமானப் படைஅதிகாரிகளையும்கடற்படை அதிகாரிகளையும்இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருந்தும்அவர்கள் மீனம்பாக்கத்தில் வந்து இறங்குவதற்குமுன்பே,தாம்பரத்திலும் குன்னூரிலும் கறுப்புக் கொடியோடு காத்துநிற்கிறார்களே எங்கள் தோழர்கள்.... அது எப்படிநீங்கள் அரசாங்க எடுபிடிகள்.... பிழைப்புக்காகப்பணியில் இருக்கிறீர்கள்அவர்கள் தங்கள் உறவுகளின் வாழ்க்கைக்காகக் களத்தில் நிற்கிறார்கள் - என்பதைத் தவிர இதற்கு வேறென்ன அர்த்தம்உண்மையிலேயேஇது யாருக்கான மிரட்டல் - என்பது, 'தமிழ் ஈழம் வேண்டும் என்று இப்போது அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்போவதில்லைஎன்று அவசரஅவசரமாக 'டெசோ தலைவர்அறிவித்தவுடனேயே அம்பலமாகிவிட்டதுஅவர்தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்கிற ஓர் அபூர்வப் பிறப்புஅவர் யார் -என்பதைஇதைவிட அழுத்தந்திருத்தமாக ஜெயலலிதாவாலேயே கூட விவரித்துவிட முடியாது.
    பச்சைத் துரோகத்துக்கும் பதவி வேட்கைக்கும் அடையாளமாய் இருக்கிற அவர் - 'ஈழம் ஒருகாலத்தில் அமையலாம்...' என்று கூழ் ஊற்றிக் குழி பறிக்கப்பார்க்கிறார்ஒரு காலத்தில் இல்லை.. இவர் காலத்திலேயே ஈழம் அமையும்..! அதை இவர் பார்க்கத்தான் போகிறார்வெறும் நம்பிக்கை இல்லை.. இதுதான்யதார்த்தம்சொந்த மண்ணுக்கு உரிமை கோரியதற்காகமண்ணின் மைந்தர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொன்று புதைக்கப்பட்டார்களே... அந்த மண் எப்படிஅமைதியாக இருக்கும்வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்... வரும்போது சிங்களவன் கதை முடியும்.. என்கிற கவிதையின் வரிகள்தான் அந்த மண்ணின்எதிர்காலத்தைச் செதுக்கும்ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் உயிர்களைப் பறித்த எவருக்காவது அதற்குள் பிரச்சினை ஏற்பட்டால்அவர்களைவென்டிலேட்டரில் வைத்திருந்தாவதுஈழம் மலர்வதைக் காட்டியாகவேண்டும்.
    எங்கள் சொந்தங்கள் கேட்கும் தமிழ் ஈழம் என்பதுதமிழரின் தாயகப் பகுதிஅதுஅவர்கள் ஆண்ட மண்... அவர்கள் வாழ்ந்த மண்.. அவர்களது உழைப்பால்செழிப்படைந்த மண்... அவர்களது அறிவால் விழிப்படைந்த மண்தங்கள் தாயகத்தைத்தான் அவர்கள் கேட்கிறார்களே தவிரகொழும்பையும் கண்டியையுமாகேட்கிறார்கள்இந்தப் பார்வையோடுதான் இலங்கைப் பிரச்சினையைப் பார்க்கவேண்டுமே தவிரராஜீவ் காந்தியின் மர்மப் பார்வையோடு.. இந்தியாவின்கள்ளப்பார்வையோடு பார்க்கக் கூடாதுஉண்மையில்தமிழ் ஈழம்.நா.வின் செயலர் நாயகத்தையே 'பிம்ப்என்று கொழுப்போடு விளிக்கும் கொழும்பின்கொத்தடிமைக் கோட்பாட்டுக்கு எதிரானதே தவிரசிங்களவர்களின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதல்லசிங்களத்தின் இறையாண்மைக்கேஎதிராக இல்லாத தமிழ் ஈழம்இந்தியாவின் இறையாண்மைக்கு எப்படி எதிரானதாகும்?
    விடுதலைப் புலிகளின் தமிழீழ வரைபடத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்திருப்பீர்களே.. தமிழகத்தின் எந்தப் பகுதியாவது அந்த வரைபடத்தில்இடம்பெற்றிருக்கிறதாஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும் இடம்பெற்றிருக்கிற பிரபாகரன் என்கிற அந்த மாமனிதன்தமிழகத்தின் எந்தப் பகுதியையாவதுதனது வரைபடத்தில் சேர்த்திருந்தானாஅவ்வளவு ஏன்இலங்கைக்கு நீங்கள் பிச்சை போட்ட கச்சத்தீவாவது அந்த வரைபடத்தில் இருக்கிறதாஅந்த அளவுக்குகண்ணியத்துடன்இந்தியா மீதான மரியாதையுடன் நடந்துகொண்டவர்களை அழித்து ஒழிக்கவேண்டும்அதற்கான போரில் ஒன்றரை லட்சம் அப்பாவிகள்செத்தாலும் பரவாயில்லைஅதைக் கண்டும் காணாதவர்களாய்க் கதர்த் துணியால் கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும் - என்பதுதான் உங்கள் கொள்கைஎன்றால், 'நவீன நயவஞ்சகர்கள்என்பதைவிட வேறு எது உங்களுக்குப் பொருத்தமான பெயராக இருக்கமுடியும்?
    இங்கிருக்கிற மேதாவிகளுக்கும்இலங்கையின் முகமூடிகளுக்கும்இது நன்றாகத் தெரியும்தெரிந்தும்ராஜபட்சேக்களைக் காப்பாற்றுவதற்காக, 'தமிழ் ஈழம் -என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதுஎன்று ஒப்பாரி வைக்கிறார்கள்கோபல்லபுரத்துக் கோமான்களைவிடக் கொடுமையானவர்கள் இவர்கள்.இந்தியாவுக்குத் தாலி கட்டுவது - சந்தடி சாக்கில் சீனாவுக்கு சிக்னல் கொடுப்பது - என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துக்கொண்டிருக்கிறது இலங்கைஅந்தஇலங்கையைத் தோளில் தூக்கிச் சுமப்பதற்காகஇந்தியர்களாகவே வாழ்கிற 7 கோடி தமிழர்களின் உணர்வுகளைக் காலில்போட்டு மிதிக்கிறார்கள் என்றால்,இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்இலங்கை தொடர்பான விவகாரங்களை அரசின் சார்பில் கவனிக்கும் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் எவராயிருந்தாலும்,அந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றபிறகு அவர்களது சொத்து மதிப்பு எக்குத்தப்பாக எகிறியிருக்கிறதா என்று முதலில் கணக்கெடுத்துப் பார்க்கவேண்டும்அது,இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லதுஒருமைப்பாட்டுக்கும் நல்லதுபாதுகாப்புக்கும் நல்லது.
    சொந்தக் குழந்தையைக் மிதிமிதியென்று மிதிக்கும் நீங்கள்பக்கத்து வீட்டுக் குழந்தையை உச்சிமுகர்ந்து கொஞ்சுகிறீர்கள் என்றால்இரண்டுவகையில் நீங்கள்அயோக்கியர்கள்ஒன்று - சொந்த மனைவியை சந்தேகப்படுகிறீர்கள்இரண்டு - பக்கத்து வீட்டுக்காரன் மனைவியை சந்தோஷப்படுத்தப் பார்க்கிறீர்கள்என்றாவதுஒருநாள் இதற்காக உங்களைக் கட்டி வைத்து மிதிப்பார்கள்அப்போது உங்கள் உடலின் எந்தப் பகுதியில் மிதிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாவது நீங்கள்எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது அவசியம். 'தடை இருக்கிறதுஎன்று பூச்சாண்டி காட்டும் உங்களின் கருவிலேயே பிழை இருக்கிறது.
    ஒரு சாதாரண போராளிகள் அமைப்பு ஆறா ரணத்துடன் நம்மை அடித்து மிதித்து விரட்டியிருக்கிறதே... அதற்குப் பாடம் கற்பிக்கவேண்டாமா.. என்கிறஇந்தியாவின் மனவக்கிரத்தைத் தவிரஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நிஜமான காரணம் வேறு எது? 'இந்தியாவின் போர் ஞாயமானதென்றால்அதை வெளிப்படையாகச் செய்யவேண்டியதுதானே... ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்என்று தம்பி முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு என்ன பதில்வைத்திருக்கிறீர்கள்?
    எங்களது உறவுகளைஒன்றரை லட்சம் சொந்தங்களைக் கொன்று குவிக்க கொல்லைப்புறம் வாயிலாக ஆயுதங்களையும் அறிவுரைகளையும் அள்ளிக்கொடுத்தஉங்கள் நபும்சக அரசுதமிழ் ஈழம் - என்கிற கொள்கையே தவறு என்கிறதுஅதற்காகவே புலிகள் மீதான தடையை நீட்டிப்பதாக சொல்கிறதுநாங்களோதமிழ்ஈழம் - என்கிற கொள்கையில் உறுதியாக இருந்ததற்காகத் தான் பிரபாகரனையும் பிரபாகரனின் தோழர்களையும் நேசித்தோம்நேசிக்கிறோம்அதனால்தான், 'எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள் தான்என்று உரக்கச் சொல்கிறோம்இலங்கை ஒன்றாகத் தான் இருக்கவேண்டும் - என்பது உங்கள்விருப்பமாய் இருக்கலாம்தமிழர் பகுதிகளில் அவசர அவசரமாக எழுப்பப்படும் புத்தவிகார்களைப் பார்த்தால் இலங்கை அப்படி விரும்புவதாகவா தெரிகிறது?
    சிங்கள மிருகங்களால் கற்பழிக்கப்பட்ட எங்களது அன்புச் சகோதரிகளின் வரலாற்றை முழுமையாகச் சொல்லபல ஆயிரம் பக்கங்களில் ஒரு புத்தகம்தேவைப்படும்மட்டக்களப்பு அருகேதன்னுடைய அழகான கிராமத்தில் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துத் திரிந்த 13 வயதுக் குழந்தை புனிதவதியைக் கூடஅந்த மிருகங்கள் விட்டுவைக்காததைத்தான்உச்சிதனை முகர்ந்தால் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருந்தேன்உங்கள் அரசால் ஆதாரப்பூர்வமான அந்தஉண்மையை மறுக்கமுடிந்ததாஅந்தப் படத்தைத் தடுக்க முடிந்ததா?
    அந்த 13 வயதுக் குழந்தையை ஏழெட்டு பேர் சேர்ந்து... அவையெல்லாம் வாயால் சாப்பிடுகிற மனித ஜென்மமா... அல்லது வவ்வால் போலவாஎன்னபாடுபட்டிருக்கும் ;அந்தக் குழந்தை... எப்படித் துடித்திருக்கும்நான் கேட்கிறேன்... மெத்தப் படித்த மேதாவிகளே... அறிவுச் சிகரங்களே... புனிதவதி உங்கள் மகளாகஇருந்திருந்தால் இலங்கையின் இறையாண்மை பற்றிப் பேசியிருப்பீர்களா நீங்கள்சேர்ந்துதான் வாழவேண்டும் - என்கிற வார்த்தைகளை வீசியிருப்பீர்களா?புனிதவதி ஒற்றைக் குழந்தையல்ல... பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளின் அடையாளம்உங்களுக்கு இதயம் இருந்தால்அங்கே எத்தனை எத்தனைபுனிதவதிகள் இப்படிச் சீரழிக்கப்பட்டார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்அதைத் தெரிந்துகொண்டால்..எஸ்மாதிரி உயர்ந்த பதவிகளில்உட்கார்ந்துகொண்டுஅனாமதேய அரசியல்வாதிகளுக்கு அடப்பக்காரர்களாக இருக்க சம்மதிக்க மாட்டீர்கள்.
    எந்த மிருகங்களால் சிதைக்கப்பட்டார்களோஅந்த மிருகங்களின் கண்காணிப்பில்தான் எங்கள் புனிதவதிகள் வாழ்ந்தாகவேண்டும் என்று வரையறை செய்யநீங்கள் யார்ஆதர்ஷில் ஆரம்பித்து பிரதீபா பாட்டீலுக்குக் கொடுப்பதாக இருந்த இடம்வரை உங்கள் இஷ்டத்துக்குக் கொட்டாய் போட்டுக்கொள்ளுங்கள்நாங்கள்குறுக்கே நிற்கவில்லைபக்கத்து நாட்டில் போய் எங்கள் இஷ்டப்படிதான் பட்டா போடுவோம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம்கொடுத்ததுகொல்லப்பட்ட இன்னமும்கொலை செய்த இனமும் ஒன்றாகத் தான் வாழவேண்டும் - என்று போதிப்பதன்மூலம் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்?
    உங்களுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்எந்த வகையிலும் புலிகளை ஆதரிக்கக்கூடாது - என்று எச்சரிக்கிறீர்கள் நீங்கள்எல்லா வகையிலும்அவர்களை ஆதரிப்போம் - என்று அறிவித்து பெருமிதத்தோடு அவர்கள் பெயரை உச்சரிக்கிறோம் நாங்கள்.
    நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது...
    என்கிற வள்ளுவம் தெரியுமா உங்களுக்குபிரபாகரன் அப்படி இருந்ததால்தான்புலிகளை நாங்கள் ஆதரித்தோம்இப்போதும் அதற்காகத் தான் ஆதரிக்கிறோம்.
    நீங்கள் எதற்காக அந்த மாவீரர்களைப் பற்றி அவதூறு பரப்புகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்அவர்கள்மற்றவர்களைப்போல உங்களது கைத்தடிகளாகஇருக்க மறுத்தவர்கள்அகிம்சை முகமூடியோடு வந்து தங்களை நசுக்க முயன்ற உங்களைலா..ரா.வின் படைப்பு ஒன்றில் ஒரு நாயை எதிர்த்து சிலிர்த்து நின்றுபோராடுமே ஒரு பூனைக்குட்டிஅதைப்போல கிளர்ந்து எழுந்து அடித்தவர்கள்நீ எங்களுக்கு எடுபிடியாய் இருக்க மறுத்தாயே... நீ எங்களைத் திருப்பி அடித்தாயேஎன்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கிறதுஅவர்கள் மீது நீங்கள் அவதூறு பரப்பஎங்கள் இனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட அந்த மாவீரர்கள் மீதுநீங்கள் உள்நோக்கத்துடன் தான் குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்று தெரிந்த அன்றிலிருந்துதான்நீங்கள் அம்பலமான அந்தக் கணத்திலிருந்துதான்அவர்களுக்குஆதரவாகப் பேசியே ஆகவேண்டும் என்கிற உறுதியான நிலையை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
    தமிழ் ஈழம் கேட்டது பிரபாகரன் இல்லை என்பதும்காந்தியத் தலைவரான செல்வா தான் இலங்கையின் இனவெறிக்கு எதிராகத் தமிழ் ஈழத்தை அறிவித்தார்என்பதும்அந்த வரலாறெல்லாம் தெரியாமல் தன்னிச்சையாக தமிழ் மக்கள் மீது தன் விருப்பத்தைத் திணிக்க முயன்றதால்தான் ராஜீவ்காந்தி அனுப்பிய படைஒரு கூலிப்படை அளவுக்கு அவமானப்பட்டுத் திரும்பிவர நேர்ந்தது என்பதும் இங்கிருக்கிற சுண்டைக்காய் அதிகாரிக்குக்கூடத் தெரியும்நியாயத்துக்கு எதிராகநாம் நிற்கலாமாராஜபட்சே என்கிற ஒரு இனப்படுகொலையாளியைக் காப்பாற்ற முயலலாமா - என்று கலகக் குரல் கொடுக்கும் துணிவு ஒரு அதிகாரிக்குக் கூடஇல்லை என்பதுதான்நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது.
    இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து - என்று முக்கி முனகுகிறீர்களே.. உண்மையிலேயே அப்படியொன்று உங்களுக்கு இருக்கிறதா என்னஉங்களுடையஇறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் நுழைந்து சுமார் ஆயிரம் மீனவர்களைச் சுட்டுக்கொன்ற ஒரு அண்டைநாட்டின்மீது உங்கள் சுண்டுவிரலைக் கூடநீட்டமுடியாதென்றால்உங்களது இறையாண்மை எங்கேயிருக்கிறதுசுவிஸ் வங்கி எதிலாவது பதுக்கிவைத்திருக்கிறீர்களாமூச்சு விடும்போதெல்லாம்இறையாண்மை என்று சொல்ல வெட்கப்பட வேண்டாமா நீங்கள்!
    தமிழ் ஈழம் - என்பது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தில் கலந்திருக்கும் அடிப்படை உரிமை... ஆட்சி உரிமைதமிழ் ஈழம் கோருவதையோ... அதுஅமைவதையோ உங்களால் எப்படித் தடுக்க முடியும்மிக அதிகபட்சமாககோபாலபுரத்திலிருந்து கேட்கிற முணுமுணுப்பை உங்களால் தடுக்கமுடியலாம்...டெசோ பேனரைக் கிழிக்க முடியலாம்... வேறெதை உங்களால் கிழிக்கமுடியும்?
    தயவுசெய்துஊரறிந்த மூன்று உண்மைகளை மறைக்க முயலாதீர்கள்ஒன்று - 26 கிலோமீட்டரில் உங்கள் நண்பன் இலங்கை செய்தது திட்டமிட்டஇனப்படுகொலை என்பது உலகம் முழுக்க அம்பலமாகிவருகிறது... அதை மூடி மறைக்க முயன்றால் நீங்கள் அம்பலமாகிவிடுவீர்கள்இரண்டு - உலகெங்கும்இருக்கிற தமிழ்ச் சொந்தங்கள் உங்களுக்கு எதிராகப் போராடவில்லை... ராஜபட்சேவைக் கூண்டிலேற்றத் தான் போராடுகிறார்கள்... அவர்களைக்கொச்சைப்படுத்த முயல்வதன் மூலம்உங்களையும் சேர்த்துக் கூண்டிலேற்றவேண்டும் என்கிற முழக்கம் உலகெங்கும் ஒலிக்க வழிவகுத்துவிடாதீர்கள்மூன்று -விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி - தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்றதொடர்ந்து முயல்வதாக இருந்தால்வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள்உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும்முடிவெடுத்து விடுகிறோம்சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்... அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள்முடிவெடுக்கக் கூடாதாதடை.. எச்சரிக்கை... என்றெல்லாம் சீன் போடாமல்எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்.
                   தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர் புகழேந்தி தங்கராஜ்

No comments:

Post a Comment