Translate

Tuesday 10 July 2012

நிமலரூபன் படுகொலைக்கு அரசே பதிலளிக்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் மனோ தெரிவிப்பு _


  நிமலரூபனை படுகொலை செய்தது இந்த அரசாங்கம் தவிர வேறு யாரும் இல்லை. நிமலரூபனின் படுகொலைக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 


அரசில் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் இன்று மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நிமலரூபனின் படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களக் கட்சிகளின் உறுப்பினர்கள் இங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிமல ரூபனை படுகொலை செய்தது இந்த அரசாங்கமே. இந்தக் கொலைக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

இதேவேளை மேலும் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு அநுராதபுரம், ராகம, கண்டி போகம்பர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அரசாங்கத்தால் விரும்பப்பட்ட கே.பி, தமிழினி, கருணா அம்மான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பலர் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். ஆனால், அரசாங்கத்தால் விரும்பப்படாத அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வில்லை. இதுதான் நீதியா அல்லது மஹிந்த சிந்தனையா எனக் கேள்வியெழுப்பினார். ___

No comments:

Post a Comment