Translate

Saturday, 7 July 2012

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!
வழக்குத் தொடராமல் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கோரியுள்ளார்.


தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் துரித கதியில்மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாவிட்டால் ஏன் அவர்களை விடுதலை செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்அரசியல் கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும் இது மனித உரிமை மீறல் பிரச்சினையாகக கருதப்பட வேண்டுமெனவும் அவர் சம்மந்தன்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களை கைதிகள் பணயமாக வைத்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அதனை தவிர்க்க முடியாது எனவும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்
அண்மையில் வவுனியாவில் கைதிகளிடமிருந்து சிறைச்சாலை அதிகாரிகளை மீட்கும் நடவடிக்கையின் போது ஒரு துப்பாக்கித் தோட்டாவைக் கூட விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைக்கைதிகள் தடிகள் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் என்று சிறீலங்காவின் அமைச்சர் தனது பாணியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment