வடக்கில் காணிசுவீகரிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர்கோட்டாபாய ராஜபக்சவின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டியஅவசியம் கூட்டமைப்பிற்குக் கிடையாது எனத் நாடாளமன்றஉறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.படையினராலும், ஆளுநராலும், பௌத்த பிக்குகளி னாலும்காணிகள் அபகரிக்கப்படுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.சர்வதேசத்திற்கும், சிறீலங்கா அரசிற்கும், உச்சநீதிமன்றிற்கும்சொல்லுவோம் எனவும்உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கானதலைமைத்துவ மற்றும் ஆட்சி நிர்வாகப் பயிற்சியில் கலந்துகொண்டு தலமை தாங்கி உரையாற்றும்போதே பாராளுமன்றஉறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
வடக்கில் படையினராலும் பௌத்தபிக்குகளாலும் காணிகள்அபகரிக்கப்படுகின்றன – மாவை
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில். வடக்கில் காணிசுவீகரிப்பு தொடர்பாக உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புஅமைச்சின்செயலாளர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். அரசின் சார்பில்சொல்கிறாரா? அல்லது செயலாளராகசொல்கிறாரா என்பது எமதுகேள்வி. செயலாளராக சொல்கிறார் என்றால் அதற்கு நாம்பதிலளிக்கவேண்டுமா என்றகேள்வியுள்ளது எனவே அரசுக்குபதிலளிப்போம்.
2003ஆம் ஆண்டு தொடக்கம் உச்சநீதிமன்றில் ஒரு வழக்குஇடம்பெற்று வருகின் றது. 2006ஆம் ஆண்டுஒரு இடைக்காலத்தீர்ப்பு வழங்கப்பட்டு சுவீகரிக்கப்பட்ட நிலங்கள் அந்த மக்களிடமேமீண்டும் கையளிக்கப்படவேண்டும்என படையினருக்குபணிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் தற்போதுசுவீகரிப்பா எனக் கூறிக்கொண்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்.
நாம் வெளிப்படையாகவே ஆளுநராலும், படையினராலும்பௌத்தபிக்குகளாலும் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை,அரசாங்கத் திற்கும், உச்சநீதிமன்றிற்கும், சர்வதேசத்திற்கும் சொல்வோம்.சுவீகரிக்கப்பட்ட நிலங்கள் பற்றியவிபரங்கள் நிறையவேஎங்களிடம் இருக்கின்றது. ஏற்கனவே நூற்றுக்கணக்கானஆவணங்களை உச்சநீதிமன்றத்திடம்கொடுத்திரு க்கின்றோம்.சுவீகரிப்பிற்காக அவர்கள் கொடுத்த ஆவணங்கள்எங்களிடமிருக்கின்றன. நேற்றுமுன்தினமும் ஆளுநர்முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய கருத்தை நாம்ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. உயர்பாதுகாப்பு வலயம் என்றசொல்லை தவிர்த்துக் கொண்டு பாதுகாபற்ற பகுதி எனகுறிப்பிடுகின்றார்கள்.
எனவே இங்கு ஒரு ஆட்சி நடக்கின்றது என்பதையே எம்மால்ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. படையினர்எழுந்தமானமாக நினைத்த இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. அந்த நிலங்களை தமக்கு தரவேண்டும்எனபொறுப்புவாய்ந்த அதிகாரிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. படையினர்; கைப்பற்றியஅடிமைகளின்பிரதேசமாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றது.எனவே அவருக்குரிய பதிலை நாம் அரசாங்கத்திற்குகொடுப்போம்.மேலும் ஜனாதிபதியே தனது தகுதியை மீறி,தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோதும்,நெருக்குவாரங்களின் மத்தியில் வடகிழக்கு தமிழ் மக்கள் எமக்குஜனநாயக உரிமையினை வழங்கியிருக்கின்றனர்.படையினரு ம்தேர்தலில் நேரடியாகவே ஈடுபட்டிருந்த நிலையில், மிகுந்தஅதனுடைய விளைவாகவேதான் ஜ.நா.மனிதவுரிமைகள்ஆணையகத் தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்படவேண்டும்,ஆக்கிரமிக்கப் பட்டுள்ள மக்களின் நிலங் கள்மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். படைகுறைக்கப்படவேண்டும் என்பனபோன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன.இந்த தீர்மானங்களை நிறைவேற்றஜ.நா.மனிதவுரிமைகள் ஆணையகம் ஒரு பொறிமுறையினைஇங்கு அனுப்பும், ஜ.நாசாசனங்களின் படி நாட்டின்விவகாரங்களில் தலையிட அந்த நாட்டின் அனுமதிபெறவேண்டும் என்ற நிலையில், இந்தநாடு இன்றைக்குஅனுமதியளித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் நீதிபதிநவனீதம் பிள்ளை இங்கு வரவுள்ளார்.சென்ற மார்ச் மாதத்தில்எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானம் செம்ரெம்பரில், மீண்டும்கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் ,அடுத்தாண்டு மார்ச் மாதத்pல் 22வது மாநாட்டிலும்ஆராயப்படும்,நாம் நிலத்திற்குப் போகவேண்டும், எங்கள் நிலத்தில்வாழவேண்டும், எங்கள் நிலத்தைஆழவேண்டும், படையினர் வெளியேற வேண்டும் என்ற கருத்து எங்களை விடவும் அதிகமாகசர்வதேசத்திற்கு குறிப்பாகஅமெரிக்கா, இந்தியா போன்றநாடுகளில் கடுமையாக ஏழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.நாம்தோற்றுப்போன இனமல்ல, அதேபோல் தனித்துவிடப்பட்ட ஒருஇனமுமல்ல, உள்ளூர் மட்டத் தலைவர்கள்,ஊறுப்பினர்கள், நாம்தனித்து விடப்பட்டவர்கள் இல்லை, உலகம் முளுவதும் எமக்காககுரல் கொடுக்க எம்மவர் உள்ளனர்,அதற்கும் மேல் சர்வதேசசக்திகள் எம்முடன் இருக்கின்றது. என்ற யதார்த்தத்தைமக்களுக்குச் சொல்லவேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment