Translate

Saturday, 7 July 2012

நாத்திகர் வாக்கு பலித்தது....

கவிஞர் வாலி அப்போல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி .யு வில் இருந்து மீண்டு இருந்த போது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு.
கவிஞர் வாலி கூறுகிறார்...
என் suite இல் படுத்திருந்தேன் Artificial Respiration க்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus .

ஒரு Vocal Cord தனை பாதித்து விட நான் பேச்சிலந்தேன்.
முதல்வர் முதல் - பல பிரமுகர்கள் வந்து நலம் விசாரித்தனர் .சைகையாலேயே நன்றி சொல்லி கொண்டு இருந்தேன்.
அப்போது தான் அவர் வந்தார் .ஒரு மணி நேரம் உடனிருந்த ஊமை தனத்தால் உளமொடிந்திருந்த எனக்கு ஆறுதல் கூறினார் . "வாலி ! அமெரிக்காவில் நானும் பைபாஸ் பண்ணிகிட்டவன் தான் . எனக்கும் "Vocal Cord " பாதிக்கப்பட்டு முழு ஊமை ஆயிட்டேன் .என் மனைவி மக்கள் விழி எல்லாம் கண்ணீர்.
மெல்ல மெல்ல எனக்கு பேச்சு வந்துடுச்சு.அது மாதிரி உங்களுக்கும் வரும். இன்னும் மூணு மாசத்துல நீங்க மேடை ஏறி பேசுவிங்க. என் வாக்கு பொய்க்காது" என்றார் அவர்.
என்ன ஆச்சர்யம் அவர் வாக்கு பலித்தது . நான் மேடை ஏறி பேசினேன். என்னளவில் அவர் வாக்கு தெய்வ வாக்கு . ஆனால் அவர் தெய்வத்தை ஏற்காத தீவிர நாத்திகர்! அவர்தான் திராவிடர் கழக தலைவர் மானமிகு திரு கி.வீரமணி அவர்கள் .

----கவிஞர் வாலி நினைவு நாடாக்கள் நூலிருந்து ...(மு.அன்புக்கரசன் )
---உண்மை மாதமிருமுறை இதழ்
- ஜூலை 1 - 15 (2012 )

No comments:

Post a Comment