Translate

Saturday 7 July 2012

‘நான் ஏன் பிறந்தேன் என்ற எம்.ஜி.ஆரின் சுயசரிதை புத்தகம் ஜானகியின் மகனுக்குத்தான் சொந்தம்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 
வி.என்.ஜானகி& கணபதி பட் தம்பதியின் மகன் சுரேந்திரன். கணபதி பட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று எம்.ஜி.ஆரை 2&வதாக ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற சுயசரிதையை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதை அச்சடித்து விற்கும் உரிமையை சுரேந்திரன் பெற்றிருந்தார்.

எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி மறைவுக்கு பின்னர் கடந்த 2003&ம் ஆண்டு எம்ஜிஆரின் சுயசரிதையை சுதா விஜயகுமார் என்பவர் வெளியிட நடவடிக்கை எடுத்தார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தானே உண்மையான வாரிசு என்றும் ஜானகியின் மகன் சுரேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சுதா விஜயகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நான்தான் உண்மையான எம்.ஜி.ஆர் வாரிசு� என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சுதா விஜயகுமார், தான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் என்பதற்கு போதிய ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் �நான் ஏன் பிறந்தேன்� என்ற புத்தகத்தை சுதா உரிமை கோர முடியாது.
கணபதி பட்டிடம் இருந்து வி.என்.ஜானகி விவாகரத்து பெற்றதும் கணவன், மனைவி உறவு சட்டப்படி அறுந்துவிட்டாலும் அம்மா&மகன் உறவு தொடர்ந்துள்ளது. தற்போதும் அது தொடர்கிறது.
அதன்படி பார்த்தால் எம்ஜிஆரின் வாரிசு அவரது மறைவுக்கு பிறகு அவர் மனைவி ஜானகிதான். ஜானகியின் வாரிசு, அவரது மகன் சுரேந்திரன். எனவே எம்ஜிஆரின் �நான் ஏன் பிறந்தேன்� என்ற புத்தகம் சுரேந்திரனுக்கு சொந்தம். அதை அவர் வெளியிட உரிமை உள்ளது.

No comments:

Post a Comment