இதன் முதற்கட்டமாக நேற்று சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஊர்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மேலும் பல உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன், நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். சுற்றுப் புயணம் மேற்கொண்டவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது
தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறீலங்காவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஐ.நா மன்றத்தில் அமெரிக்கா சிறீலங்காக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது, தமிழக மக்களின் போராட்ட அழுத்தங்கங்களுக்கு பனிந்து இந்திய அரசு, ஐ.நா தீர்மானத்தை ஆதரித்து.
ஆகவே தமிழர்களின் ஒற்றுமையிலேயே தமிழர்களின் எதிர்காலம் உண்டு என்பதை தமிழினம் உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு உள்ள ஒரே தீர்வு தனித்தமிழ் ஈழமே, 1976 நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து 99 சதவீத மக்கள் வாக்களித்தனர், ஒத்து வாழமுடியாத இரு சமூகம் அமைதி வழியில் பிரிந்து போக உரிமை உண்டு என்கிறது ஐ.நா சர்வதேச வழிகாட்டல்கள், அந்த ஐ.நா சபை வாக்கெடுப்பு நடத்தி கிழக்கு தைமூர், எரித்தீரியா, ஸ்லோவோக்கியா, தெற்கு சூடான் போன்ற தனி நாடுகள் உருவாகியிருக்கின்றன.
அந்த வழியிலே பல நூற்றாண்டு காலமாக தங்கள் உடமைகளையும், உரிமைகளையும், உயிர்களையும் இழந்து அடிமைகளாக வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை ஐ.நா மன்றமே அமைதி வழியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும், சிறீலங்காயில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரனைக்கு
ஆனையிட வேண்டுமென தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடுவதன் மூலமே வாழ்வுரிமை இழந்து நிற்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும், இதுவே ஒவ்வொரு தமிழனின் சமுதாய கடமையாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடு தழுவிய விழிப்புணர்வு சுற்றுப் பயணம் செய்கின்றோம் என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment