லண்டனில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இளம் பெண் (22) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உளவுத்துறை அளித்த தகவலின்படி லண்டனின் ஹேக்னியில் இருந்த அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தெரிவித்தனர். எனினும் இவரது பெயரை வெளியிட போலீஸôர் மறுத்து விட்டனர். கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
லண்டனில் வரும் ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிகிறது. இருப்பினும் இந்தக் கைது நடவடிக்கைக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தொடர்பில்லை என்று லண்டன் பெருநகர காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment