Translate

Thursday, 12 July 2012

நைஜீரியாவில் இருந்து இலங்கை சென்று முளகாய் அரைத்த நபர் சிக்கினார் !

லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்திருப்பதாக கூறி இலங்கையர்களை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜையொருவரை ஜூலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. வெள்ளவத்தையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், கிளின்ச் கிறிஸ்டியன் எனும் இச்சந்தேக நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.


மேற்படி வர்த்தகருக்கு ஈ.எஸ்.பி.என். கிரிக்கெட் சபை மெகா லொத்தர் பரிசிழுப்பில் 750,000 ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்திருப்பதாக அவருக்கு தொலைபேசி மூலம் குறுஞ்செய்தியொன்று அனுப்பப்பட்டது. இப்பரிசை பெற்றுக்கொள்வதற்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, வயது, தொழில் ஆகிய விபரங்களை எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் அக்குறுஞ் செய்தியில் கோரப்பட்டிருந்தது. இதன்படி மேற்படி விபரங்களை குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு வர்த்தகர் அனுப்பினார். அதன்பின் மேற்படி பரிசுத் தொகை கூரியர் மூலம் அனுப்பப்படும் எனவும் இதற்கான கட்டணமாக 1000 அமெரிக்க டொலர்களை வர்த்தகர் செலுத்த வேண்டும் எனவும் பதில் அனுப்பப்பட்டது.

1000 டொலர்களை கொழும்பில் வர்த்தகரை சந்திக்கும் முகவர் ஒருவரிடம் வழங்குமாறு வர்த்தகர் கோரப்பட்டார். இதன்படி கூரியர் நிறுவன முகவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் ஒருவரிடம் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றியல் வைத்து ஜூலை 7 ஆம் திகதி இவ்வர்த்தகர் காசை வழங்கினார். ஆதன்பின் தான் ஏமாற்றப்பட்டாக உணர்ந்ததாக கூறி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் மேற்படி வர்த்தகர் முறைப்பாடு செய்தார். அதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

இச்சந்தேக நபரை நீதவான் கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்படுத்திபோது சந்தேக நபரை ஜூலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். ஆஹா இவ்வளவு நாளா இன்ரர் நெட்டில் தான் இப்படி ஏமாற்றி வந்தார்கள் என்றுபார்த்தால், இப்ப நேரடியாவே இலங்கை சென்று ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார்கள், உஷார் !

No comments:

Post a Comment