Translate

Monday 9 July 2012

மதுரையை சர்வதேச நகரமாக்க… ராஜபக்ஷே பெயரில் வருகிறது விமானம்


வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் ‘மிகின் ஏர்’ விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டில்லியிலுள்ள இந்திய விமான நிலைய அதிகார மையம் (AAI – Airports Authority of India) மிகின் ஏர் விமானங்கள் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதுரையில் தரையிறங்க அனுமதி வழங்கியுள்ளது. கொழும்புவில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
“இலங்கை விமானத்தின் வருகையுடன், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை பெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில், மத்திய அரசின் அனுமதியும் கிட்டியுள்ளது.
அனைத்தும் சுமுகமாக நடைபெற்றால், செப்டெம்பர் முதல் வாரத்தில் இருந்து மிகின் ஏர் விமானங்கள் மதுரையில் இருந்து பறக்க துவங்கிவிடும்” என அறிவித்துள்ளார், விமான நிலைய இயக்குநர் கே.சங்கையா பாண்டியன்.
இலங்கை அரசுக்கு சொந்தமான முழு சேவை விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளது. குறைந்த கட்டண சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான், மிகின் ஏர். இலங்கை ஜனாதிபதியின் பெயரில் உள்ள ‘மகிந்த’ என்பதை சிங்கள மொழியில் சுருக்கமாக அழைக்கும் ‘செல்லப் பெயர்’தான்,  (nickname), ‘மிகின்’.
Calling சீமான்.. சீமான்.. சீமான்!

No comments:

Post a Comment