இலங்கை இராணுவத்தின் முதலாவது இயந்திர காலாட்படைப்பிரிவினரால் இந்தப் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் முதலாவது இயந்திர காலாட்படைப்பிரிவின் அதிகாரிகளும் படையினரும் பங்கேற்றதுடன், ஏழு பௌத்த பிக்குகளுக்கும் தானம் வழங்கப்பட்டுள்ளது.
1992 இல் இயக்கச்சிப் பகுதியை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றும் வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் இருந்திருக்கவில்லை. இயக்கச்சிப் பகுதி ஆனையிறவுப் பெருந்தளத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்தே, அங்கு புத்தர் சிலை ஒன்று இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்டிருந்தது.
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனையிறவுப் பெருந்தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட போது இந்தப் புத்தர் சிலை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. _
No comments:
Post a Comment