Translate

Thursday 5 July 2012

படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளி களை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். 


சொந்தமாக கிளினிக் இல்லை, மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ்டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்களுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில் தான், இத்தகு எளிமையான, சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டு ரூபாய்தான்.

இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர், இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிப்போம்.

Tks : vidhai2virutcham 

No comments:

Post a Comment