Translate

Wednesday 25 July 2012

காலக்கெடு முடிவதற்குள் ஜெனிவாவிடம் அறிக்கையை கையளித்தது சிறிலங்கா

Posted Imageஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.


ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி செயலகத்தினால் இந்த அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் தயாரிக்கப்பட்ட 10,700 சொற்கள் அடங்கிய இந்த அறிக்கை, சிறிலங்கா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதில் இறுதி நேரத் திருத்தங்களை சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க செய்த பின்னர், சிறிலங்கா அதிபரால் ஒப்பமிடப்பட்டது.

இதையத்து மின்னஞ்சல் மூலம் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவருக்கு அனுப்பட்ட அந்த அறிக்கை, அவர் மூலம் நேரடியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வரும் நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் பூகோள கால மீளாய்வு கூட்டத்துக்கான இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவின் இறுதிநாள் நேற்றாகும்.

இந்த அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பதில் கடைசிநேரம் வரை இழுபறி நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://www.puthinapp...?20120724106660 

No comments:

Post a Comment