Translate

Monday, 16 July 2012

சிங்கள அரசு வெற்றி பெறும் : நான் அப்போதே சொன்னேன் !


சென்னை: இலங்கையில் நடந்த ஆயுத போரில் சிங்கள அரசுதான் வெற்றி பெறும் என்று நான் அப்போதே சொன்னேன் என்று கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். டெசோ மாநாடு குறித்து விளக்கம் அளிக்க அவர் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு மாடாகத்தான் டெசோ மாநாடு இருக்கும். இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நார்வே, சீனா , நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர், மாநாடு குறித்து தவறான தகவல்கள் தரப்பட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்னல்களை களைந்திடும் விதமாகவும், அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தவும் இந்த மாநாடு முக்கிய முடிவுகள் எடுக்கும். அரசியல் தலைவர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், இலங்கையில் உள்ள சம்பந்தன் உள்ளிட்டேர் பங்கேற்கின்றனர்.


சிங்கள ராணுவம் தமிழர்களை அழித்து விட்டது போக எஞ்சிய தமிழர்களை பாதுகாக்கவும் இன்னல்களை களையவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் . தனி ஈழம் தொடர்பான தீர்மானம் இருக்காது. அமைதியான வழியில், அறவழியில் தான் செயல்பட வேண்டும் என்பது எனது ஆசை , சர்வேதச தலைவர்கள் கொடுக்கும் ஆலோசனைப்படி முடிவுகள் இருக்கும் . ஆயுதங்கள் தூக்கி வெற்றி பெற முடியாது என்றும், இதில் சிங்கள அரசுதான் ஜெயிக்கும் என்று அன்றே நான் சொன்னேன்.

விடுதலை புலிகளுக்கு தடை விதித்து குறித்து கருத்து கேட்டதற்கு, இது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஆயுதப்போராட்டம் நடத்தக்கூடாது என்ற கருத்தில் உடன்பாடு உள்ளது. டெசோ மாநாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து நெருக்குதல் இல்லை. நெருக்குதல் இருந்தால் அஞ்ச மாட்டேன் என கூறினார்.

No comments:

Post a Comment