
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆயுதப்படை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலுவலக காரில் சென்றார்.
பிளைமோவுத் பகுதியில் வந்த போது வழியில் சான்விஜ்பாக்ஸ் பிளஸ் கோப்பி ஷாப்பில் காரை நிறுத்த சொல்லி அங்கு சென்று காபி குடிக்க கடைக்குள் சென்றார்.
அங்கிருந்த பெண் ஊழியர் ஷீலா தாமஸ், பிரதமர் என தெரியாமல் வரிசையில் நிற்குமாறு கூறினார். வரிசையில் நிற்க முடியாது சீக்கிரம் காபி கொடுக்குமாறு கூறினார்.
உடனே ஆத்திரம் அடைந்த ஊழியர் தான் பணியில் பிஸிசியாக இருப்பதால், உடனே தர முடியாது வரிசையில் நிற்குமாறு கூறி வாக்குவாதம் செய்தார்.
அதன் பின் அங்கு பிரதமரின் ஊழியர்கள் வந்தனர், இவர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் என்பதை விவரித்தனர்.
இதனையடுத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டார், எனினும் அவரின் வாக்குவாதத்தினால் அங்கு 10 நிமிடம் கோப்பிக்காக பிரதமர் கமரூன் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இந்த தகவலை டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment