Translate

Saturday, 7 July 2012

நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.


நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.


சிறிலங்கா சிறைச்சாலை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலை கொழும்பில் அடக்கம் செய்து, அவரது கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம் சுமத்தியுள்ளார்.



நிமலரூபன் மாரடடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் என்ற மாயையைத் தோற்றுவித்து உலகை ஏமாற்றுவதற்காகவே அவரின் உடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் சிறிலங்கா அரசாங்கம போலிக் காரணங்களைக் கூறிவருவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.


நிமலரூபனின் பெற்றோரை வெற்றுப் பத்திரங்களில் கையொப்பமிடுமாறு சிறிலங்கா பொலிஸார் வற்புறுத்தியுள்ளனர். தமது மகன் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்பதை பெற்றோர் உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருந்ததாக அறியமுடிவதாக பொன்.செல்வராசா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment