பாஸ்டன்: உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.
எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.
இந்த கம்ப்யூட்டர் வைரஸுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயர். ஆனால் இதுகுறித்து கம்ப்யூட்டர் நிபுணர்கள் கூறுகையில், இந்த வைரஸால் சிலர் மட்டுமே பாதிக்கப்படக் கூடும். ஆனால் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படும் என்பதெல்லாம் வதந்தியே. இன்டர்நெட் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய இன்டர்நெட் சேவையாளர்கள் தயாராகவே உள்ளனர். எனவே யாரும் பீதியடையத் தேவையில்லை என்று அவர்கள் ஆறுதலாகப் பேசுகிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு இதுபோல பீதியைக் கிளப்பிய ஜீயஸ், ஸ்பைஐ ஆகிய அதி பயங்கர கம்ப்யூட்டர் மால்வேர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அலூரியன் வைரஸ் சாதாரணமானதுதானாம்.
ஆனால் உலகம் முழுதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை அலூரியன் வைரஸ் பாதிப்பது உறுதி என்று சிலர்அடித்துக் கூறுகிறார்கள். இதில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் கம்ப்யூட்டர்களுக்குப் பாதிப்பு வருமாம்.
ஜூலை 9ம் தேதி பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று...
http://tamil.oneindia.in/news

No comments:
Post a Comment