பலாங்கொடையில் தமிழர்கள் மீது தாக்குதல்

அத்தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபையைச் சேர்ந்த காரியசித்தன் வேல்முருகன் (28), நாகலிங்கம் கதிரேசன் (23) ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கசிப்பு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாகவே தாக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடமொன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் ஆலய நிர்வாகசபை அங்கத்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சப்ரகமுவ தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment