Translate

Monday, 30 July 2012

குமார் குணரத்னம் என்னை வணங்கி உயிருக்காக மண்டியிட்டார்!


குமார் குணரத்னம் என்னை வணங்கி உயிருக்காக மண்டியிட்டார்!
குமார் குணரத்னம் தனது காலில் விழுந்து வணங்கி உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டி நின்றார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாலங்கா தீப பத்திரிகையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணியின் இரகசியத் தலைவர் என்று கூறப்படும் குமார் குணரத்னவை 1988 ஆம் ஆண்டில் முதலில் கைது செய்தவர் நீங்கள் என்றும் அன்றிலிருந்து அவருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனால்தானா 2010 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஐக்கிய மக்கள் முன்னணியின் ஆதரவு உங்களுக்கு கிடைத்தது?

பதில்:- குணரத்னவை நான்தான் கைது செய்தேன். அப்போது எனது தலைமையகம் கந்தளாய் பிரதேசத்தில் அமைந்திருந்தது. அவர் குணரத்ன என்ற பெயரில் இருக்கவில்லை. காமினி என்ற பெயரிலேயே இருந்தார். எனது கட்டுப்பாட்டில் இருந்த மன்கி பிரிட்ஜ் முகாம் ஊடாகத்தான் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் என்னிடம் அழைத்து வரப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் என்னை வணங்கி அவரது உயிருக்கு எந்த ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

நான் பல்கலைக்கழக மாணவர் என்றும் பல விடயங்களைக் கூறினார். நான் உண்மையில் அவர் மீது பரிதாபப்பட்டேன் அதனால் அவருக்கு எந்தவிதமான ஆபத்தையும் விளைவிக்கவில்லை. அவர் இருக்கும் இடம் குறித்து அதிக விடயங்கள் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனினும் அங்கு அவர் இனந்தெரியாத குழுவொன்றை இயக்கிக் கொண்டிருந்தார் என்பது தெரியும்.

எனது வீரர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குறித்து கொழும்புக்கு தெரியப்படுத்தினோம். பின்னர் கொழும்புக்கு அனுப்பச் சொன்னார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குணரத்னம் என்றொருவர் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இவரது பெயர் வெளியான போதுதான் நான் தெரிந்து கொண்டேன் அவர் இன்னமும் இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார் என்று. அவருடன் எந்த்த் தொடர்பும் இருக்கவில்லை. இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்குத் தெரியும். மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களுடன்தான் எனது அனைத்து அரசியல் தொடர்புகளும் இருந்தன. இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment