இந்தியாவைத் துரத்தும் ஆபத்துக் களும் கோழைத்தனமான ராஜதந்திரமும்!- Rste
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சி அடைந்துள்ளது மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
வியப்பாக இருக்கின்றது இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கின்றது? உங்கள் இராஜதந்திரமும், வெளியுரவுக் கொள்கையும் சரியா இருந்தால் சீனா எப்படி நெருங்க முடியும்? சுதந்திரத்துக்காக போராடும் மக்களை ஒடுக்கும் அரசுகளுக்கு உதவினால் அதிர்ச்சியடைய மேலும் பல விடங்கள் காத்திருக்கின்று இந்தியாவுக்கு
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவுக் கரம் நீட்டியும் அலட்டித் தட்டிவிட்ட இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவும் உதவி செய்ததோடு, பல நாடுகளின் உதவியும் பெற்றுக்கொடுத்தது. எல்லாம் தன்னுடைய நாட்டின் பாதுகாப்பு என்றும் இதுதான் இராஜதந்திரம் எனவும் பிதற்றியது.
ஆனால் சிங்கள பேரினவாதிகள் என்றும் இந்தியர்களுக்கு நண்பர்கள் அல்ல என்பதை பலமுறை நிரூபித்தும் இல்லை இல்லை என அடம்பிடிக்கின்றது இந்தியா. அதாவது முதலிலேயே தான் விட்ட பிழைகளை மறைக்க தொடர்ந்தும் பிழைகள் மேல் பிழைகள் என தலைகீழாக நின்றாவது தான் செய்த பிழைகளை சரியென உலகிற்கு காட்ட சதிராட்டம் போடுகின்றது.
அன்றும் இன்றும் என்றும் சீனா, பாகிஸ்தான் அதற்கு பிறகுதான் இந்தியா என்ற அறிவிக்கப்படாத வெளியுரவுக் கொள்கை வகுத்து வைத்துள்ளது சிங்கள பேரினவாத அரசு, சொல்லி வைத்தால்ப் போல் அனைத்து சிங்கள பேரினவாத அரச அதிபர்களும் இதே முறைகளை தவறாமல் கடைபிடிக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வைத்து சிங்கள பேரினவாத அரசை ஆட்டுவிக்கலாம் என்றிருந்த இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தானை காட்டி பயமுறுத்துகின்றது இலங்கை.
உண்மையில் சிங்கள பேரினவாதிகள் பகுதியில் சிறு புல்லைக் கூட ஆட்டிவைக்க முடியாமல் தவிக்கின்றது. தமிழர்கள் பகுதிகளில் மட்டும் ஏதே போனால் போகட்டும் என்ற அளவுக்கு சிங்கள பேரினவாதம் இந்தியாவை விட்டுவைத்திருக்கின்றது அதற்கு காரணமும் தமிழர்கள்தான்.
கொழும்பை தவிர இந்தியா ஏன் யாழில் மட்டும் தூதுவராலயம் அமைத்திருக்கின்றது ஏன் சிங்கள பகுதிகளில் அமைக்கவில்லை? காரணம் சிங்கள பகுதிகளில் அமைக்க அனுமதி கிடைக்காது மற்றது சிங்களவர்கள் தமிழர்கள் போல் இந்தியாவுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.
ஆனால் சீனா அப்படியல்ல யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தரை வரை அனைத்து இடங்களிலும் எழுதப்படாத அதிகாரம் செலுத்துகின்று பல ஆயிரம் சீனர்கள் இவ் வேலைகளுக்கு என இலங்கையில் இறக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவை கண்காணிக்க இதற்கு மேலும் வசதிகள் சீனாவுக்கு தேவைப்படாது என்பதே உண்மை.
இதற்கு மேலும் அழுத்தமாக கூறவேண்டுமானால் சீனா இந்தியாவின் நடமாட்டத்தை கண்காணிக் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சீனாவுக்கு தெரிந்திருக்கின்றது கோடிக்கணக்கில் இராணவத்தை வைதிருப்பதால் மட்டும் போரில் வென்று விட முடியாது மாறாக பல ஆண்டு கால தந்திரமான கண்காணிப்புகள் பெரும் தியாகங்கள் ஆழ்கடலை விட அமைதியான ஆழமான காத்திருப்பு என்பது மிக அவசியம் என்பதும் சீனா அறிந்திருக்கின்றது.
நேபாளத்தில் 36, இலங்கையில் 12, பாகிஸ்தானில் 20, ஆப்கானிஸ்தான் 7, வக்கதேசத்தில் 9, மாலத்தீவில் 8 திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் இந்தியா மேற்கொண்டும் பணிகள் மிகக் குறைவானது.
சீனாவின் இத்திட்டங்கள் எதிர்கால 20பது ஆண்டுகளுக்கானதாகவும் இருக்கலாம் கண்டிப்பாக குறுகிய நோக்கம் அல்ல ஆனால் இந்தியாவின் வெளியுரவுக் கொள்கை என்ன என்பது வெளியுரவுத்துறை செயலருக்காவது தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எதற்கெடுத்தாலும் இலங்கை சென்று கைகட்டி நிற்பதே இந்தியாவுக்கு வாடிக்கையாகிட்டது.
ஆசிய வல்லரசு என அழைக்கப்படும் இந்தியா போய் பேச வேண்டுமா அல்லது வரவழைத்து பேச வேண்டுமா? இலங்கை, இந்தியா வந்ததை விட இந்தியா, இலங்கை வந்ததே அதிகம் எனலாம். ஆனால் எல்லாம் எமக்கு தெரியும் எல்லாம் பாதுகாப்புக்கு எல்லாம் இந்தியாவின் எதிர்கால நலனுக்கு என அறிவித்த இந்திய இராஜதந்திரிகள் இன்று வரை செய்தது எல்லாம் இந்தியாவுக்கு எதிராகத்தான்.
எடுத்துக்காட்டாக 30 ஆண்டுகாலம் வைத்துக்கொள்வோம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீனா இலங்கையில் வளர்ந்து நிற்கின்றது அனைத்து வகையிலும், உதாரணம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில்த்துறைகள், கட்டுமானங்கள், என சீனர்கள் இலங்கையில் கை வைக்காத இடமே இல்லையெனலாம்.
ஆக முப்பதாண்டு காலமாக இந்தியாவின் இராஜதந்திரம் இலங்கையில் சாதித்தது என்ன? சரி சாதிக்க வேண்டாம் பாதுகாப்புக்கு எல்லாம் பாதுகாப்புக்கு என உறத்துக்கூறியவர்களால் இந்தியாவின் எதிரியான சீனாவின் ஆதிக்கத்தையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? மாறாக இலங்கையில் சீனாவின் வளர்ச்சி வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது.
ஆகா முப்பதாண்டுகளில் இலங்கை வந்து இறங்கிய இந்திய ராஜதந்திரிகள் இலங்கை அதிபர்கள் கொடுக்கும் விருந்தையும் பரிசுகளையும் மட்டுமே இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்களே தவிர பாதுகாப்பையே அல்லது இலங்கையில் அதிகாரத்தையோ அல்ல.
இலங்கையை பொறுத்தவரை தமிழர்கள்தான் இந்தியாவுக்கு நண்பர்களாக இருந்து இந்தியாவை காப்பாற்றுவார்கள், இந்தியா தமிழர்களுக்கு நீதியாக செயற்பட்டால்.
தீர்க்கமான வெளியுரவுக் கொள்கை வகுக்கப்படாத வரையும் கோழைத்தனமான இராஜதந்திரம் உள்ளவரையும் இந்தியாவால் இலங்கையில் மட்டுமல்ல ஆசியாவில் எங்கும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
படியுங்கள் பரப்புங்கள்
No comments:
Post a Comment