சபரகமுவ தேர்தலில் மனோவுடன் கூட்டுச்சேர்கிறார் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்துள்ள சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், மறைந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் சேவல் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
சபரகமுவ மாகாணத்தில் உள்ள கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவிடாமல் அங்கு நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றை உருவாக்குவது தான் தமது நோக்கம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியில் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான கட்சியுடன் கூட்டுசேர்ந்து போட்டியிடுவது பற்றி அரசாங்கத்துக்கு தான் விளக்கமளித்துவிட்டதாகவும் அந்த விளக்கத்தால் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் மேலும் கூறினார்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதில் தமது தரப்பிலிருந்து எவ்வித சிக்கலும் இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
சபரகமுவ மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் வாக்காளர்களும் பிரதான கட்சிகளுக்கு வாக்களிப்பதால் நீண்டகாலமாக இழக்கப்பட்டு வருகின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இந்த புதிய தேர்தல் கூட்டின் மூலம் மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சபரகமுவ மாகாணத்தில் தமிழர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கு அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது அவசியப்படுகின்றது என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment